இயக்குனர் அமீருக்கும், தாலிபான்களுக்கும் இடையேயான தொடர்பு குறித்து காவல் துறையினரிடம் புகார்

 இயக்குனர் அமீருக்கும், தாலிபான்களுக்கும் இடையேயான  தொடர்பு குறித்து  காவல் துறையினரிடம் புகார் இயக்குனர் அமீருக்கும், தாலிபான்களுக்கும் இடையேயான தொடர்பு குறித்து காவல் துறையினர் கண்காணிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் சார்பில் காவல் துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்து மக்கள் கட்சியின் மாநில அலுவலகசெயலாளர் குமரவேல்
காவல்துறையினரிடம் தந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, சினிமா டைரக்டர் அமீர் அளித்த ஒருபேட்டியில் தாலிபான்கள் என்ற ஆப்கானிஸ் தான் தீவிரவாதிகளை ‘போராளிகள்’ என கூறியுள்ளார்.

ஆயிரக் கணக்கான அப்பாவிகளை கொன்றுகுவித்த தாலிபான்களை இப்படிகூறுவது தமிழக இளைஞர்களை அவர்களது அமைப்பில் சேருவதற்கு பிரச்சாரம்செய்வது போல் உள்ளது.
விஸ்வரூபம் படம்தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில் தமிழகத்தில் மத நல்லிணக் கத்திற்கு பங்கம் உருவாக்கும் வகையில் அமீரின் பேட்டி அமைந்துள்ளது.

அவருக்கும், தாலிபான்களுக்கும் மத்தியில் இருக்கும் தொடர்பு குறித்து போலீசார் கண்காணிக்கவேண்டும். வெளிநாடு சுற்றுப்பயணத்தின் போது தாலிபான்கள் யாரையும் அவர் சந்தித்தாரா? என விசாரிக்க வேண்டும். அமீரின் மீது போலீசார் கடும்நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்து முன்னணியின் மாநில தலைராக இருந்து படுகொலை செய்யப் பட்ட ராஜ கோபால் கொலையில் அமீருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றியும் விசாரணை நடத்தி தேச விரோத சக்திகளை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என அவர் தனது புகர் மனுவில் தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்க ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் – கவர்னர் ரவி நெகிழ்ச்சி 'யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு, திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது, தமிழின் ...

வெளியானது பாஜக மாவட்ட தலைவர் பட ...

வெளியானது பாஜக மாவட்ட தலைவர் பட்டியல் – அண்ணாமலை வாழ்த்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கான பா.ஜ., தலைவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ...

ஜனநாயகம் தொடர்ந்து வெற்றி பெறு ...

ஜனநாயகம் தொடர்ந்து வெற்றி பெறுகிறது : மங்கீ பாரத் நிகழ்ச்சியில் மோடி பெருமிதம் ''நம் நாட்டின் தேர்தல் நடைமுறைகள் குறித்து சிலர் சந்தேகம் ...

தமிழகத்தில் சமூக விரோதிகளுகக் ...

தமிழகத்தில் சமூக விரோதிகளுகக்கும், கொள்ளையர்களுக்குமான ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது – அண்ணாமலை  குற்றச்சாட்டு 'தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கும், கொள்ளையர்களுக்குமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது' ...

கோ கோ முதல் உலகக்கோப்பையை வென்ற ...

கோ கோ முதல் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கோ கோ முதல் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிகளுக்கு ...

மருத்துவ செய்திகள்

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...