காலங்கள் மாறுகின்றன காட்சிகளும் மாறுகின்றன

 காலங்கள் மாறுகின்றன காட்சிகளும் மாறுகின்றன காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம் என்பார்கள் , ஆம் காலங்கள் மாறுகின்றன காட்சிகளும் மாறுகின்றன. அன்று பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷரீப்பை சிறையில் தூக்கி போட்டு அரியணையை அபகரித்து கொண்ட பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் இன்று சிறையில் . நவாஸ் ஷரீப்போ மீண்டும் பாகிஸ்தானின் அரியணையில் . காலங்களும் காட்சிகளும் எப்படி மாறிவிட்டன.

பாகிஸ்தானில் நடந்து முடிந்த பார்லிமென்‌ட் தேர்தலில் நவாஸ் ஷெரிப்பின் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி மொத்தம் உள்ள 272 தொகுதிகளில் 125க்கும் ‌அதிகமான தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது . ஆனால் பெனசிர் புட்டோவின் மகன் பிலால் தலைமையிலான ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியோ நான்கில் ஒரு பங்கு தொகுதியை கூட வெல்லமுடியாமல் தவித்து கொண்டிருக்கிறது.

ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களின் தலைகள் கூட இதில் தப்பவில்லை . பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்களான யூசுப் ரசா கிலானி, ராஜா பெர்வேஸ் அஷ்ரப், கிலானியின் மகன்கள் , ஹைதர், மூசா ,  உள்ளிட்டோர் தோல்வியடைந்துள்ளனர்.

தீவிரவாதிகளின் துப்பாக்கி சூடுகளுக்கும், குண்டு மழைகளுக்கும் , நூற்றுக்கணக்கான உயிர் பலிகளுக்கும் மத்தியில் மக்கள் அஞ்சாமல் ஆளும் கட்சிக்கு எதிரான தங்கள் மனநிலையை வாக்கில் காட்டியுள்ளனர். செயல்படாமல் ஊழலில் திளைத்த சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சியை ராணுவத்துடனான சமரசமே காப்பாற்றி வந்தது. போதிய பெரும்பான்மை இல்லாத ஆளும் கட்சியின் ஊழல் , நிர்வாக சீர்கேடுகளை நவாஸ் ஷரீப் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடுமையாக எதிர்த்த போதும் அதை கலைக்க முன்வரவில்லை. இங்கே சி.பி.ஐ பூதத்தை போன்று அங்கே ராணுவ பூதம் எதிர்கட்சியினரையும் கூட்டணி கட்சியினரையும் மிரட்டி வந்தது.

ஆளும் கட்சியினர் என்னதான் அதிகாரம் பொருந்தியவர்களாக இருந்தாலும் ஆயுள் முடிந்துவிட்டால் மக்கள் மன்றத்தில் வந்துதானே ஆகவேண்டும். அங்கே அவர்களை சி.பி.ஐ.,யோ ராணுவமோ காப்பாற்ற போவதில்லை . இதை அவர்கள் தோல்வியடைந்த பின்னும் உணர்ந்ததாக தெரியவில்லை.

நவாஸ் ஷெரிப்பின் வரவானது இந்தியா பாகிஸ்தான் உறவில் மறுமலர்ச்சியை உருவாக்கும் என்று கூறிவிட முடியாது. இவரது கோட்டையான பஞ்சாப் மாகாணத்தில் தான் தீவிரவாத முகாம்கள் கொடிகட்டி பறக்கின்றன.நூற்றுக் கணக்கான ஷியா முஸ்லீம்களை கொன்று குவிக்கும் சன்னி முஸ்லீம் தீவிரவாத இயக்கமான லஷ்கர் இ ஜாங்வி நவாஸ் ஷெரிப்புக்கு நெருக்கமான இயக்கம் என்றால் . லஷ்கர் – இ – தொய்பா இவரது தம்பிக்கு நெருக்கமான இயக்கமாக இருக்கிறது.

இருப்பினும் அதல பாதளத்தில் சரிந்து கிடக்கும்  பாகிஸ்தான் பொருளாதாரத்தையும், சட்ட ஒழுங்கையும் தூக்கி நிறுத்த வேண்டும் என்றால் இந்தியாவுடனான நட்ப்பு மிகவும் அவசியம் என்பதையும். இந்தியாவுடனான நட்ப்பை தூக்கி நிறுத்த வேண்டும் என்றால் ராணுவத்தையும் ,  தீவிரவாதத்தையும் கட்டுப்படுத்த வேண்டியது மிக மிக அவசியம் என்பதையும் அறியாதவர் அல்ல ஷெரிப்.

பாகிஸ்தானில் காலமும் மாறிவிட்டது, காட்சியும் மாறிவிட்டது , பெரும்பான்மையே இல்லாமல் ஆட்சி புரிந்து வந்த பாகிஸ்தான் மக்கள் கட்சி காணமல் போய்விட்டது. இந்தியாவிலும் பெரும்பான்மையே இல்லாமல் ஆட்சி புரிந்து வரும் காங்கிரசை காணாமல் போக செய்யும் காலம் வரப்போகிறது. மீண்டும் பாஜக தலைமையிலான இந்திய அரசும் , பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைமையிலான பாகிஸ்தான் அரசும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தும் காட்சியும் வரப்போகிறது .

தமிழ்தாமரை V.M.,வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

மருத்துவ செய்திகள்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...