பிறப்பால் நான் இந்து, இதில் தவறு எதுவும் இல்லை அதே நேரத்தில் நான் தேசப்பற்றுள்ள ஒருதேசியவாதி என, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
மோடி இன்று ராய்ட்டர் செய்திநிறுவனத்திற்கு அளித்துள்ள சிறப்புபேட்டியில் ; நான் இதுவரை யாருக்கும் எந்த கெடுதலும் செய்யவில்லை. ‘ நான் பிறப்பால் இந்து. இது தவறுஇல்லை ‘- நான் இந்தியன் இதில் தவறு இல்லை. அதேநேரத்தில் எனக்கு தேப்பற்றும் முக்கியம். ஆர்எஸ்எஸ்., இயக்கமும் தேப்பற்றை போதிக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியும் முக்கியம் என்று கருதுகிறேன். எனதுகட்சியில் யாரும் என்னை சிக்கலானவன் என சொல்லவில்லை.
2002 ம் ஆண்டில் நடந்த குஜராத் கலவரத்தை அடக்க நான் அனைத்து முயற்சிகளையும் எடுத்தேன். இந்த கலவரம் எனக்கு பெரும்கவலையை தந்தது.
உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு படையினர்கூட என்னை குற்றமற்றவன் என்று தெரிவித்து இருக்கிறது. நான் காரி்ன் பின்சீட்டில் உட்கார்ந்து போகும்போது கூட தெருவில் சென்ற ஒருநாய் காருக்கு அடியில் வந்தால்கூட நான் பெரும் கவலைப் படுவேன். நான் முதல்வராக இருந்தாலும் எனக்கு அந்த உணர்வு உண்டு. மனிதநேயம் எனக்கு முக்கியம். இயற்கை மற்றும் மனிதநேய மீறல்செயல்கள் எங்கு நடந்தாலும் எனதுமனம் கவலைப்படும்.
ஓட்டுக்காக நான் கவலை பட்டதில்லை. பெரியபதவிக்கு ஆசைப்படவில்லை. ஓட்டுக்காக இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களை நான் பிரித்துபார்க்கும் எண்ணம் எனக்கு இல்லை. பிரிவினை எனக்குபிடிக்காது. இந்தியா ஜனநாயக நாடு. அனைவரும் அனைத்தும் பெறவேண்டும். என்று மோடி கூறினார்
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.