காமராஜரின் எண்ணங்களை இன்றையமாணவர்கள் தங்கள்செயல்களில் காட்டவேண்டும் என்று மதுரையில் நேற்று காமராஜரின் வெண்கலசிலையை திறந்துவைத்து தமிழக பா.ஜ.க தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் பேசினார்.
நாகமலை புதுக்கோட்டையில் உள்ள ஜெயராஜ் அன்ன பாக்கியம் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளியில் காமராஜர் திருவுருவ வெண்கலசிலை நேற்று திறக்கப்பட்டது. காமராஜரின் 11வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் இந்த சிலையை திறந்துவைத்து பேசியதாவது:
தமிழகத்தின் சிறந்த முதலமைச்சராக இருந்தவர். ஏழை எளியோருக்கு என மதிய உணவுத்திட்டம் கொண்டுவந்தவர். மாணவர்கள் படிக்க பல்வேறு கல்வி நிலையங்கள் திறக்க காரணமாக இருந்தவர். இந்த அற்புதமனிதர் காமராஜரின் சிலையை திறப்பதை எனக்குக்கிடைத்த மிகப்பெரிய கவுரமாக கருதுகிறேன். கல்விக்கண் திறந்த காமராஜரின் எண்ணங்களை இன்றையமாணவர்கள் செயலில்காட்ட வேண்டும் என்றார்.
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.