2007ஆம் ஆண்டுமுதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளில் சுமார் 8 லட்சம் ஹெக்டேர் விவசாய விளைநிலங்களை ரியல் எஸ்டேட் முதலைகள் விழுங்கியுள்ளது!
ஆனால் நரேந்திரமோடியின் குஜராத் ஆட்சியில் ரியல்எஸ்டேட் அதிபர்கள் கொழுத்து வருகின்றனர் என்ற செய்திகளுக்குமாறாக அங்கு விவசாய நிலங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.
ஆளும் ஐமுகூ. ஆட்சியின் வளர்ச்சித்திட்ட பொருளாதாரக் கொள்கைகளினால் நாட்டில் உணவுப் பாதுகாப்பே இல்லாமல் போய்விடக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
விவசாயநிலங்கள் நாட்டின் முதுகெலும்பு ஆனால் முதுகெலும்புள்ள இன்றைய ரியல்எஸ்டேட் அரக்கர்கள் அதனை விழுங்கிவருகின்றனர். இது பெரிய ஆபத்தில் தான் கொண்டுபோய் விடும் என்று நிபுணர்கள் கருத்துதெரிவித்துள்ளனர்.
4 ஆண்டுகளில் மொத்தம் 7.90 லட்சம் ஹெக்டேர் விளை நிலங்களை ரியல்எஸ்டேட் அபேஸ் செய்துள்ளது. இதில் குறிப்பாக ஹரியானா மாநிலத்தில் அதிகளவில் விளை நிலங்கள் சூறையாடப்பட்டுள்ளன.
2007-08-ஆம் ஆண்டில் 23 கோடிடன் உணவு தானியம் உற்பத்திசெய்யப்பட்டது. இது, 2012-13-ல் 25.54 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. ஆனால் காணாமல்போகும் விளைநிலங்களால் நீண்டகால அடிப்படையில் பேராபத்து ஏற்படும். ஐ.மு.கூ பொருளாதார முண்டாசுகளுக்கு இதனை உணர்த்தப்போவது யார்?
விளை நிலங்களை அபேஸ்செய்ய அனுமதி அதே வேளையில் உணவுப் பாதுகாப்பு மசோதா சட்டம்! இதுதான் ஆளூம்வர்க்கத்தின் செயல்பாடுகளில் இருக்கும் பெரியமுரண்பாடு.
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
Leave a Reply
You must be logged in to post a comment.