மத்தியில் மக்கள்விரோத ஆட்சி நடத்திவரும் காங்கிரஸ் கட்சியை, வரும்தேர்தலில் மக்கள் புறக்கணிப்பார்கள். பாஜக, ஆட்சி அமைப்பது உறுதி,” என்று பாஜக ., அகில இந்திய செய்திதொடர்பாளர் மீனாட்சிலெகி பேசினார்.
மதுரையில் இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்ககோரி, இளைஞரணி சார்பில் நடந்த கூட்டத்தில் அவர்பேசியதாவது: மதத்தின்பெயரால் மக்களை பிரித்தாளும் சூட்சியை காங்கிரஸ் கட்சி செய்துவருகிறது. பெரும்பான்மை மக்களுக்கு கிடைக்கவேண்டிய சலுகைகளை, ஓட்டுக்காக சிறுபான்மையினருக்கு வழங்கி பாகுபாட்டை உருவாக்கியது .
ஆங்கிலேயர் ஆட்சியின்போது, ரூபாய், டாலர்மதிப்பு சமமாக இருந்தது. சுதந்திரம்பெற்று இத்தனை ஆண்டுகளாகி ஒருடாலருக்கு 65 ரூபாய் என்ற நிலை உள்ளது. நாட்டின் வளம் 65 சதவீதம் வெளியேசென்றுவிட்டது. இந்தியபணம் சுவிட்சர்லாந்து, இத்தாலி, சிங்கப்பூர் வங்கிகளில் முடங்கியுள்ளது. நாட்டை இந்தளவிற்கு காங்கிரஸ் அரசு பின்தள்ளியுள்ளது.
65 முதல் 70சதவீதம் மக்கள் வறுமைகோட்டிற்கு கீழே உள்ளதாக சோனியாசொல்கிறார்.
நாடு விடுதலைபெற்று இத்தனை ஆண்டுகளாகியும் பெருவாரியான மக்கள் இன்னும் வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பதற்கு காங்கிரஸ் கட்சியை தவிர யாரும் காரணம் இல்லை. உணவுபாதுகாப்பு சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கிறது. பொது வினியோக திட்டத்தில் சத்தீஸ்கர், தமிழகம் என சிலமாநிலங்கள் சிறப்பாக செயல்படும் நிலையில், இந்த உணவுபாதுகாப்பு சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
காங்கிரஸ் ஆட்சியில்தான் மதக் கலவரம், குண்டு வெடிப்புகள், இந்துதலைவர்கள் கொல்லப்படும் சம்பவங்களை சிலபயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்துசெய்து வருகின்றது. மக்களை மதத்தால், சமூகத்தால், ஜாதியால்பிரித்து ஆட்சிசெய்யும் இந்த காங்கிரஸ் கட்சியை இந்ததேர்தலில் வீட்டுக்கு அனுப்புவோம். அப்போதுதான் இந்தநாடு முன்னேற்றமடையும் என்றார்.
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.