பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதல் கூட்டமாக ஹரியானாவில் இன்று நடந்த கூட்டத்தில் நரேந்திரமோடி பேசினார். காங்கிரஸ் மீது அவர் கடுமையான தாக்குதலையும்தொடுத்தார். ஹரியானா மாநிலம் ரேவரி நகரில், முன்னாள் ராணுவத்தினர் கூட்டத்தில்
இன்று மோடி கலந்துகொண்டார். கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் இந்தக் கூட்டத்திற்காக திரண்டிருந்தனர். நரேந்திரமோடி மேடைக்கு வந்ததும் பலத்த கைத்தட்டலும், வரவேற்பும் காதைல் பிளப்பதாக இருந்தது.
மேடைக்கு வந்த மோடி முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மரியாதைசெய்வதாக மேடையில் விழுந்து வணங்கி மரியாதை செலுத்தினார். . இந்த காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது.
பின்னர் பொதுகூட்டத்தில் அவர் பேசியதாவது ;
சீனா மற்றும், பாகிஸ்தான் எல்லையில் நடந்துவரும் பிரச்னைகளுக்கு மத்திய அரசின் நிலையற்ற தன்மையே காரணம் , இது சீராகும்வரை எல்லையில் பிரச்னை இருக்கத்தான் செய்யும் , எல்லையில் பிரச்னை இல்லை, டில்லியில்தான் பிரச்னை .
இந்திய ராணுவ வீரர்கள் இந்தநாட்டை காத்துவருகின்றனர். அவர்களின் வீர, தீரம் போற்றுதலுக்குரியது. நீண்ட நாட்களுக்கு பின்னர் நான் ராணுவ வீரர்களுடன் இருப்பது பெருமையாக கருதுகிறேன். இவர்களுக்கு நாம் நன்றிதெரிவிக்க கடமை பட்டுள்ளோம். அக்னி 5 இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. மகிழச்சியான செய்தியை தந்த விஞ்ஞானிகளை பாராட்டுகிறேன். 2 நாட்களுக்கு முன்னர் என்னை பிரதம வேட்பாளராக அறிவித்துள்ளது எனது வாழ்நாளில் கிடைத்த பெரும் பாக்கியம். இந்த அறிவிப்பு வந்த பின்னர் உங்கள் மத்தியில் பேசுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் மிக ஏழை குடும்பத்தில் பிறந்துவந்தவன். நான் பணம்சேமித்து வைத்து சைனிக் பள்ளி புத்தகங்கள் வாங்கியவன். எனது தந்தையிடம் பணம்கேட்ட போது அவர் தர மறுத்து விட்டார். நான் சிறுவனாக இருந்தபோது ராணுவபள்ளியில் சேர்வதற்கான விளம்பரம் பார்த்தேன். இங்கு குறிப்பேடு வாங்குவதற்கு என்னிடம் பணம் இல்லை. 2 ரூபாய் கூட என்னிம் இல்லாமல்இருந்தது. நான் பணம்சேமித்து வைத்து வாங்கினேன். நாட்டிற்கு சேவை செய்யவேண்டும் என விரும்புகிறேன். ராணுவ வீரர்களுக்கு உணவு பரிமாறுவேன்.நான் சிறுவனாக இருந்தபோது எனது தந்தைக்கு தெரியாமல் எல்லைப் பகுதிக்கு சென்று ராணுவ வீரர்களுடன் இருந்துள்ளேன். இவர்களுக்கு நான் டீ மற்றும் உணவு பரிமாறுவேன். இதுபோன்று பல நாட்கள் இவ்வாறு செய்துள்ளேன்.
குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது ராணுவ வீரர்கள் சேவை பெரும்பங்கு வகித்தது. இவர்கள் உயிருக்கு போராடியவர்களை இடிபாடுகளில் இருந்து காப்பாற்றினர். இந்திய – பாக்., எல்லையில் தாக்குதல் நடந்தபோது நமது வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் நமது பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி , இது பாக்., படையினர் அல்ல. பாக்., ராணுவ சீருடையில் தான் பயங்கரவாதிகள் வந்தனர் என்கிறார். பீகாரைசேர்ந்த அமைச்சர் ஒருவர் சாவதற்குத்தான் நாம் ராணுவத்தில் சேருகிறோம் என்கிறார். நக்சல் மற்றும் பயங்கரவாதிகளால் நமது ராணுவ வீரர்களை இழந்துவிட்டோம். ராணுவ வீரர்கள் அருமை நமது தலைவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது. நான் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போது எல்லைக்கு போய் தீபாவளியை கொண்டாடுவேன் , வரும் தீபாவளியையும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவேன்.
சீனா நமது எல்லையைபிடித்து ஆக்கிரமித்துள்ளது . அருணாசல பிரதேசத்தை பிடிக்க சீனா தொடர்ந்துமுயற்சித்து வருகிறது. ஊடுருவல் தொடர்ந்து நடக்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் திறமையற்ற காரணத்தினால் தொடர்ந்து சீனாவும், பாகிஸ்தானும் நம்மிடம் வாலாட்டிவருகிறது. சீனா, பாகிஸ்தான் எல்லையில் பிரச்னை வருவது மத்திய அரசின் கையாலாகாத்தனமே . கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எல்லாவகையிலும் அழிவு பாதைக்கு கொண்டுசென்றுள்ளது. வாஜ்பாயும், அத்வானியும் வெளிநாட்டு விவகாரங்களில் திறம்பட தெளிவானமுடிவு எடுத்தனர். பயங்கரவாதம் அழிப்பதிலும், வளர்ச்சிபணிகள் காண்பதிலும், உலக அமைதிக்கும், நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க கூடாது. இந்த போக்கை கைவிட வேண்டும் . இந்தியாவிற்கு எதிரான செயல்களில் ஈடுபட வேண்டாம். இது ஏழை மக்களுக்கு பயன் தராது. கல்வி அறிவை வளர்க்க, வறுமையை ஒழிக்க பாகிஸ்தான் பாடுபடட்டும்.
வளமான இந்தியா, பலமான ராணுவம் உருவாகவேண்டும் என நாங்கள் கனவுகாண்கிறோம். நமது ராணுவமே மதச்சார்பற்ற தன்மையின் அடையாளம். நமது பட்ஜெட்டில் அதிகபணம் ராணுவத்திற்கு செலவிடப்படுகிறது. இது குறிப்பாக சிறியபொருட்களை இறக்குமதி செய்வதற்கு அதிகம் செலவழிக்கிறோம். அயல்நாடுகளுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதிசெய்யும் அளவிற்கு வளரவேண்டும். குஜராத்தில் ராணுவ தளவாடங்கள் உற்பத்திசெய்யும் தொழிற்சாலையை துவக்கியிருக்கிறோம். ராணுவத்தினருக்கான பென்சன் கொள்கை குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்.
இந்த நாட்டிற்கு அரும்பாடுபட்ட சர்தார் வல்லபாய்பட்டேலை அரசு மறந்துவிட்டது. சர்தாருக்கு ஒவ்வொரு கிராமம்தோறும் சிலைகள் நிறுவப்பட வேண்டும். இங்கே கூடியிருக்கும் கூட்டம்போல் இதுவரை நான் பார்த்ததில்லை. எதிர்காலத்தில் நல்ல மாற்றம் நிகழப்போவது உறுதி. பாரத் மாதாக்கி ஜெ., பாரத் மாதாக்கி ஜெ., வந்தே, வந்தே என உரத்த குரலில் பேசி தனது உரையை மோடி நிறைவுசெய்தார்.
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.