மத்தியில் பாஜக ஆட்சிக்குவந்தால் விவசாயிகள் நலன் கவனத்தில்கொள்ளப்படும். நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு முக்கியத்துவம் தரப்படும என்று பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
மராட்டிய மாநிலம் லத்தூரில் விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக 375 கிமீ. தூர பாதயாத்திரை மேற்கொண்டது. இதன் நிறைவுவிழா நேற்று அவுரங்காபாத்தில் நடந்தது. இதில் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் கலந்துகொண்டு 5 கிமீ. தூரம் விவசாயிகள், தொண்டர்களுடன் நடந்துசென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:–
மத்தியில் பாஜக ஆட்சிக்குவந்தால் விவசாயிகள் நலன் கவனத்தில்கொள்ளப்படும். நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு முக்கியத்துவம் தரப்படும இதன்மூலம் வறட்சியால் பாதிக்கப்படும்பகுதியில் விவசாயிகள் மேம்பாடு அடைய வழிவகை ஏற்படும்.
பாஜக ஆட்சிக்குவந்தால் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். தற்போது பாஜக ஆளும் மாநிலங்களில் விவசாயிகளுக்கு வட்டியில்லாகடன் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
மத்தியில் ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். பாஜக.,வுக்கு வாய்ப்பு அளிக்க மக்கள் முடிவுசெய்து விட்டார்கள். பாரதீய ஜனதாவின் செயல்பாடுகள் தங்களை பாதுகாக்கும் என மக்கள் நம்புகிறார்கள்.
மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெறும் ஆட்சியையும், இப்போது மத்தியில்ஆளும் காங்கிரஸ் ஆட்சியையும் ஒப்பிட்டுப்பார்த்து வருகிறார்கள். பாரதீய ஜனதாவால் மட்டுமே நல்லாட்சி வழங்கமுடியும் என்று கருதுகிறார்கள்.என்று ராஜ்நாத்சிங் பேசினார்.
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.