கூகுளில் அதிகம்தேடப்பட்ட இந்திய தலைவர்களில் பா.ஜ.க., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி முதலிடம் பிடித்துள்ளார். இந்தியாவில் உள்ள மற்ற தலைவர்களை பின்னுக்குத் தள்ளி இந்த ஆய்வில் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
இணையதளங்களில் அதிகம்தேடப்பட்ட இந்திய அரசியல் தலைவர்கள் பற்றிய ஆய்வை கூகுள் நிறுவனம் சமீபத்தில்நடத்தியது. இதில் மோடி முதலிடம் பிடித்துள்ளது தெரியவந்துள்ளது. மோடியைதொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், சோனியா, மன்மோகன்சிங் மற்றும் அரவிந்த்கெஜ்ரிவால் ஆகியோர் உள்ளனர். இணைய தளங்களில் அதிகம்தேடப்பட்ட அரசியல் கட்சியும் பா.ஜ.க, தான்.
மேலும் 2014ம் ஆண்டு லோக்சபாதேர்தலில் 160 இடங்களின் வெற்றியை சமூக வலைதளங்கள்தான் தீர்மானிக்கும் எனவும் கூகுளின் ஆய்வுமூலம் தெரியவந்துள்ளது. இது குறித்து கூகுள்இணையதள ஆய்வாளர் நமான் புகாலியா தனது டுவிட்டர் பகுதியில் கூறுகையில், சமூகவலைதளங்கள் சிறிய அளவு பங்குபெற்றாலும் மிகமுக்கியமான பங்கினை லோக்சபா தேர்தலில் செய்ய உள்ளது என தெரிவித்துள்ளார். சமூகதளங்கள் மூலம் விவாதிக்கப்படும் விஷயங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக இருப்பதே இதற்குகாரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
37 சதவீத நகர்புறவாக்காளர்கள் ஆன்லைன் பயன்படுத்துபவர்களாக உள்ளனர். மேலும் 45 சதவீத வாக்காளர்கள், யாருக்க ஓட்டளிப்பது என்பதுகுறித்த விபரங்களை ஆன்லைன் மூலம் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர். 42 சதவீதம் நகர்புற வாக்காளர்கள் ஓட்டளிப்பதில் குழப்பமானநிலையிலேயே இருந்து வருகின்றனர். நகர்புற வாக்காளர்கள் ஓட்டளிப்பதை தவிர்த்துவருவதாக நிலவும் கருத்திற்கு மாறாக கடந்த தேர்தலில் ஆன்லைன் பயன்படுத்தும் நகர்புற வாக்காளர்கள் 85 சதவீதம் பேர் ஓட்டுப் போட்டுள்ளனர். இவ்வாறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.