நிலக்கரிச்சுரங்க ஒதுக்கீட்டு ஊழல்தொடர்பாக சி.பி.ஐ விசாரணையை எதிர்கொள்ளத் தயார் என்ற பிரதமரின் வீர வசனத்தை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராகும்முன் பிரதமர் பதவியிலிருந்து மன்மோகன்சிங் விலகவேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த்சின்ஹா கூறியதாவது “பிரதமரின் கட்டுப்பாட்டிலுள்ள சி.பி.ஐ அமைப்பு எவ்வாறு அவரையே விசாரிக்கமுடியும்? பிரதமரிடம் பாரபட்சமற்ற விசாரணை நடத்த சி.பி.ஐ அதிகாரிகள் அஞ்சும் நிலைதான் ஏற்படும்’ என்றார்.
பாஜக செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது, நிலக்கரி ஒதுக்கீட்டு கோப்புகளில் கையெழுத்திட்ட பிரதமருக்கு ஊழலில் பெறுப்பில்லையா என கேள்வி எழுப்பினார். சிபிஐ விசாரணை பிரதமர் இல்லவாயிலுக்கே வந்துவிட்டது. ஆனால், சிபிஐ பிரதமர் அலுவலகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில்தான் உள்ளது. பிரதமரின் இணைச்செயலர் சிபிஐ நிலவர அறிக்கையைத் திருத்தியிருக்கிறார்.
எனவே, சிபிஐ விசாரணையை எதிர்கொள்ளத்தயார் என பிரதமர் அறிவித்திருப்பது அர்த்தமற்றது . ஒருவேளை, மாயாவதி, முலாயம்சிங், பவன்குமார் பன்சால் ஆகியோருக்கு வழங்கியதுபோல தனக்கும் சி.பி.ஐ நற்சான்றிதழ் வழங்கும் என்று பிரதமர் கருதிஇருக்கலாம் என்றார் ஜாவடேகர்.
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.