நாடுமுழுவதும் பா.ஜ.க.,வினர் நடத்தும் பிரசார பொதுக்கூட்டங்களை ஒருங்கிணைப்பதற்காக பிரசாரநிர்வாக மையத்தை பா.ஜ.க தில்லியில் திங்கள்கிழமை தொடங்கியது.
அடுத்த மாதம் நடைபெறும் ஐந்துமாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் மக்களவைத் தேர்தலைக் கருத்தில்கொண்டு பா.ஜ.க இதை தொடங்கியுள்ளது.
இந்தமையத்தை தொடங்கிவைத்து பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் வெங்கய்யநாயுடு, “வரும் தேர்தல்களில் கட்சியின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.
“வரும் மக்களவைத் தேர்தலின்போது இந்தமையம் பாசறைபோல் செயல்படும்’ என்று பாஜக துணைத்தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.
பாஜக சார்பில் நடத்தப்படும் பிரசாரபொதுக் கூட்டங்கள், பேரணிகள், தெருமுனைக் கூட்டங்கள் அனைத்தும் இந்தமையத்தில் பதிவு செய்யப்படும். இது தொடர்பான விவரங்கள் அனைத்தும் பாஜக பிரதமர்பதவி வேட்பாளர் நரேந்திரமோடிக்கு அனுப்பப்பட உள்ளன. சமூக வலைத்தளம் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த நிர்வாகமையம் இணைக்கப்பட்டுள்ளது.
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
Leave a Reply
You must be logged in to post a comment.