டெஹல்கா நிறுவன ஆசிரியராக இருந்த தருண்தேஜ்பால் தம்மை ‘சட்டப்படி’ பலாத்காரம் தான் செய்தார், பலாத்காரம் என்பதற்கு சட்டம் எத்தகைய வரை யறைகளை கொடுத்திருக்கிறதோ அதையெல்லாம் என்னிடம் தேஜ்பால்செய்தார். என பாதிக்கப்பட்ட பெண்பத்திரிகையாளர் பகிரங்கமாக புகார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அப்பெண் பத்திரிகையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
எனக்கு பரந்துபட்ட அளவில் ஆதரவுகிடைப்பது ஆறுதளிக்கிறது. அதேநேரத்தில் என்னுடைய புகார் தேர்தலுக்குமுந்தைய அரசியல் சதியாக்கப்படுவது ஆழ்ந்த கவலைக் குரியதாகும்.
பெண்கள் தங்களது வாழ்வுரிமையை பாதுகாக்கவேண்டிய சூழல் இருக்கிறது. ஆனால் பெண்ணிய அரசியல் என்பது அரசியல்கட்சிகளால் பாதிக்கப்படுகிறது. இது பெண்கள்மீதான வன்முறை, பெண்களின் அதிகாரம் தொடர்பான பிரச்சனை. இதில் அரசியல்கட்சிகள் விலகி இருக்கவேண்டும் என்றே விரும்புகிறேன்.
தருண் தேஜ்பால் என்னை பலாத்காரம்செய்வதற்கு முன்பும் பின்புமான என்னுடைய செயல்பாடுகள் குறித்து தொலைக் காட்சிகளின் விமர்சகர்கள் பலரும் பலவாறுகேள்வி எழுப்புகின்றனர். பலாத்காரம் என்பதற்கு சட்டம் எத்தகைய வரை யறைகளை கொடுத்திருக்கிறதோ அதையெல்லாம் என்னிடம் தேஜ்பால்செய்தார்.
நான் என்னுடைய தாயார்ஒருவரின் வருமானத்தை அடிப்படையாக கொண்டு இந்த குரலை எழுப்பி இருக்கிறேன். என்னுடைய தந்தையார் பல ஆண்டு காலம் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
தேஜ்பாலைபோல சொத்தை, செல்வாக்கை, மரியாதையை பாதுகாக்க நான்போராடவில்லை. இது என்னுடைய உடல். எனக்குமட்டுமே சொந்தமானது. நான் பணிபுரியும் நிறுவன உரிமையாளர் என்றபெயரால் எவரும் என் உடலில் விளையாட அனுமதிக்க முடியாது. நான் புகார்தெரிவித்திருப்பதால் இழந்திருப்பது பணியை மட்டுமல்ல. என்னுடைய நிதிபாதுகாப்பையும் கூடத்தான்.
இந்தபோராட்டம் வெகு சுலபமானது அல்ல என்பதை நான் அறிவேன். என்னுடைய வாழ்க்கையில் பெண்கள் தங்களைச்சுற்றிய பாலியல் கொடுமைகளுக்கு எதிராக உரத்த குரல் கொடுக்கவேண்டும் என்றே எழுதியும் பேசியும் வலியுறுத்தியும் வந்திருக்கிறேன். நமதுநோக்கத்தை கேள்விக்குள்ளாக்கி நமது பலத்தை சீர்குலைத்து அதையே நமக்கு எதிரான பலவீனமாக் குவார்கள். இந்தவிஷயத்தின் நான் அமைதியாக இருக்க முடியாது.
இந்த விவகாரத்தில் டெஹல்கா நிறுவனத்தின்மரியாதை பாதிக்கப்பட்டிருக்கிறது வருத்தமளிக்கிறது. ஆனால் வாரஇதழின் தலைமைசெய்தி ஆசிரியராக இருந்தவரின் பாலியல் வன்முறையால் தானே தவிர பணியாளராகிய என்னால் அல்ல. அனைவரது ஆதரவுக்கும் நன்றி .
என்று அப்பெண் பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.