ஆட்சியமைக்க உரிமை கோரமாட்டேன்

 டில்லி சட்ட சபை தேர்தலில், பாஜக., பெரும்பான்மை பெறவில்லை. எனவே , ஆட்சியமைக்க உரிமை கோரமாட்டேன்,” என்று அம்மாநில பா.ஜ.க.,வின் முதல்வர் வேட்பாளர், ஹர்ஷ்வர்த்தன் கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது ; டில்லி தேர்தலில், ஆட்சி அமைக்கும் அளவுக்கு, பாஜக.,வுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால், ஆட்சிஅமைக்க அழைக்கும்படி, நான் உரிமைகோர முடியாது. என்ன நிகழப்போகிறது என்பது தெரியவில்லை. “முதல்வரானால், வெளிப்படையான நிர்வாகத்தை அளிப்பேன்’ என்று மக்களுக்கு உறுதி அளித்தேன். அந்த உறுதி மொழியை காப்பாற்றமுடியாத, உதவியற்ற நிலையில் உள்ளேன். எம்எல்ஏ.,க்களை விலைக்குவாங்கும், குதிரைப்பேரத்தில் ஈடுபடுவதற்குப் பதிலாக, எதிர்க் கட்சி வரிசையில் அமரவே விரும்புகிறேன்.

தற்போதைய நிலையில், ஓட்டளித்த மக்களுக்கு நான் நன்றிதெரிவித்து கொண்டிருக்கிறேன். எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்து, மக்களுக்கு என்னசெய்ய முடியும் என்பது பற்றியும் சி”ந்திக்கிறேன். வேறு எதைப்பற்றியும் நான் சிந்திக்க முடியாது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஏழை மக்கள்கட்சியை, நான் குறைவாக மதிப்பிட்டுவிட்டேன். தேர்தலில் அதிக இடங்களைப் பிடித்த, கெஜ்ரிவாலுக்கு என் வாழ்த்துக்கள். இவ்வாறு ஹர்ஷ்வர்த்தன் கூறினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...