ஜனநாயக நடைமுறைகளை கேலிக் கூத்தாக்கும் நாணயமற்ற அரசியல் அராஜகத்தின்மூலம் ஓட்டுபோட்ட மக்களை இழிவுபடுத்த ஆம் ஆத்மி கட்சிக்கு உரிமையில்லை என பாஜக கடுமையாக சாடியுள்ளது.
காங்கிரஸ், பாஜக ஆதரவை பெறுவதற்கு அரவிந்த்கெஜ்ரிவால் 18 நிபந்தனைகள் விதித்தார். அந்த நிபந்தனைகளை அக்கட்சிகள் ஏற்கவில்லை. டெல்லியில் புதியஅரசு அமைவதில் ஏற்பட்டுள்ள இழுபறி குறித்து குடியரசுதலைவர் பிரணாப்முகர்ஜிக்கு துணைநிலை கவர்னர் நஜீப்ஜங் அறிக்கை அனுப்பி உள்ளார்.
இந்நிலையில் டெல்லி பாஜக தலைவர் விஜய்கோயல் கூறியதாவது:-
டெல்லியில் அரசு அமைப்பதை ஆம் ஆத்மி கட்சி அரசியல்நாடகம் ஆக்கியிருப்பது துரதிர்ஷ்ட வசமானது. அரசு அமைப்பது மிகமுக்கியமான பிரச்சனை. இதை அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தக் கூடாது. காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதை அனைவரும்அறிவார்கள்.
ஆனால் ஆம் ஆத்மிகட்சி வேண்டுமென்றே இந்தவிஷயத்தில் தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதை தாமதித்து கொண்டிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியினர் பாஜக,வுடனோ, காங்கிரசுடனோ எந்த உறவும் வைத்துக் கொள்வதில்லை என்று தங்கள் குழந்தைகள்பெயரால் உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளனர்.
அப்படி இருக்கிற போது, கெஜ்ரிவால் ஏன் 18 நிபந்தனைகள்தொடர்பாக பாஜக.,வுக்கும், காங்கிரசுக்கும் கடிதம் எழுதவேண்டும்? இறுதியாக, உறுதியாக ஆம் ஆத்மி ஒருவிஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும்.
ஆட்சி அமைப்பீர்களா, இல்லையா? ஜனநாயக நடைமுறைகளை கேலிக் கூத்தாக்கும் வகையில், இத்தகைய நாணயமற்ற அரசியல் அராஜகத்தின்மூலம் ஓட்டுபோட்ட மக்களை இழிவுபடுத்த ஆம் ஆத்மிக்கு உரிமை இல்லை.
பாஜக.,தான் மக்களின் முதல்தேர்வு. வாக்காளர்களின் தீர்ப்பை நாங்கள் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் ஆம் ஆத்மி , துரதிர்ஷ்டவசமாக சாமானியமக்களின் எதிர் பார்ப்புக்களை மதிக்க தவறிவிட்டது என்று விஜய்கோயல் கூறினார்.
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.