நரேந்திர மோடியை பிரதமர்வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன்தான் பா.ஜ.க கூட்டணி அமைக்கும், தேர்தலில் பா.ஜ.க.,வின் ஒரே இலக்கு காங்கிரசை வீழ்த்துவதே ஆகும் என்று பாஜக தேசியசெயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.
இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட அதேநாளில் தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்துள்ளது. அவர்களுக்கு வாழ்த்துகள். குறுகிய காலத்தில் மக்களை நம்பவைத்து, அவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் ஊழல்களைக்கண்டு கொதிப்படைந்த மக்களின் வாக்குகள் பா.ஜ.க.,விற்கு சென்று விடக்கூடாது என்பதற்காக ஆம் ஆத்மிகட்சியின் வளர்ச்சியை காங்கிரஸ் விரும்பியது. அவர்களது விருப்பம், தற்போது காங்கிரஸ் கட்சியையே வீழ்த்தி விட்டது.
ஆம் ஆத்மியினர் , காங்கிரஸ் கட்சியின் ஊழல்களுக்கு எதிராக போராடுவதற்காக வந்துவிட்டு, தற்போது காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்திருப்பது சரியானதில்லை. அதோடு அரவிந்தகெஜ்ரிவாலின் பேச்சிலும் முதிர்ச்சியின்மை காணப்படுகிறது.
பா.ஜ.க.,வைப் பொறுத்த வரை இந்தியாமுழுவதும் ஊழலற்ற ஆட்சி வழங்குவதாக கூறி வாக்குகேட்டு வருகிறோம். வெறும் உறுதிமொழிகளை மட்டுமே வழங்கும் கட்சிகளை விட, ஆட்சியில் செய்த சாதனைகளை உதாரணமாக காட்டி பாஜக வாக்குசேகரிக்கிறது. மத்தியில் ஊழலற்ற ஆட்சி அமைய நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக கொண்ட பா.ஜ.க.,விற்கு மக்கள் வாக்களிக்கவேண்டும்.
மோடிமீது காங்கிரஸ் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும், காங்கிரஸ்மீது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி மோடிக்கு உண்டான மக்கள்செல்வாக்கை அதிகரிக்கும். தமிழகத்தை பொறுத்தவரை நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கப்படும். இங்கு அ.தி.மு.க, தி.மு.க அல்லாத மாற்றுஅணியை உண்டாக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டிருப்பது உண்மை. தேர்தலில் பா.ஜ.க.,வின் ஒரே இலக்கு காங்கிரûஸ வீழ்த்துவதே ஆகும் என்றார்.
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.