பாஜக., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு விசாவழங்குவதை அமெரிக்கா பல ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ளது. மோடி மீது மதவாத குற்றச் சாட்டுக்களை சுமத்தி , அமெரிக்கா இந்நிலைப்பாட்டில் இருந்தது . பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட பிறகும் , அமெரிக்கா தனது நிலையில் பிடிவாதமாக இருந்தது.
இந்நிலையில், வரும் 2014ம் லோக் சபா தேர்தலில், மோடியின் வெற்றிவாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தவிஷயத்தில் இந்திய மீடியாக்களின் கருத்து கணிப்புக்கள் மட்டுமன்றி, சர்வதேச ஏஜன்சிகளின் கருத்துகணிப்பும் மோடிக்கு சாதகமாகவே புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளன.
இதையடுத்து, மோடிவிஷயத்தில் அமெரிக்கா தனது நிலையை மாற்றிக்கொள்ள துவங்கியிருக்கிறது. முதல் கட்டமாக, இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் நான்சி பவல் , நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். இந்தசந்திப்பு குஜராத், காந்தி நகரில், வரும் 14 அல்லது 15 தேதிகளில் நடக்கும் என்று அமெரிக்க தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோடிக்கு, கடந்த 2005ம் ஆண்டு, விசாவழங்குவதற்கு அமெரிக்கா தடைவிதித்ததை தொடர்ந்து, ஐரோப்பிய யூனியன் நாடுகள், பிரிட்டன் ஆகியவையும் மோடிக்கு விசாவழங்க தடை விதித்திருந்தன. ஆனால், மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன் அந்த நாடுகள் அந்த தடையை வாபஸ் பெற்றுக்கொண்டன.
அமெரிக்க தூதர் சந்திப்பு குறித்த அறிவிப்பை தொடர்ந்து, பா.ஜ.,வின் வெளிநாட்டுதொடர்பு அமைப்பாளர் சந்திர காந்த் படேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அமெரிக்க அரசின் இம்முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இந்த முடிவால், இந்திய-அமெரிக்க நட்புறவு மேலும் வலுவடையும்,’ என குறிப்பிட்டுள்ளார். மேலும் அமெரிக்காவின் இந்த முடிவிற்கு அங்குவாழும் குஜராத் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.