எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி 232 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளதாக சி.என்.என்-ஐ.பி.என் மற்றும் லோக் நிதி அமைப்புகள் தங்கள் கருத்து கணிப்புகளில் தெரிவித்துள்ளன.
இது குறித்து சி.என்.என்-ஐ.பி.என் தொலைக்காட்சி மற்றும் லோக்நிதி அமைப்பு கூறியுள்ளதாவது: பாஜக 193 முதல் 213 தொகுதிகள்வரை தனித்து கைப்பற்றும். காங்கிரஸ் கட்சி, இது வரை இல்லாத குறைவான அளவாக 94 முதல் 110 தொகுதிகளில் மட்டும் வெற்றிபெறும்.
மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் 20 முதல் 28 தொகுதிகளை கைப்பற்றி 3ஆ வது இடத்தை பிடிக்கும். அ.இ.அ.தி.மு.க 14 முதல் 20 தொகுதிகளையும், இடதுசாரிகள் 15 முதல் 23 தொகுதிகளையும் கைப்பற்றும்.
நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் மற்றும் அரவிந்த் கேஜரிவாலின் ஆம்ஆத்மி கட்சிக்கு 1 முதல் 5 தொகுதிகளே கிடைக்கும். மாயாவதியின் பகுஜன் சமாஜ்கட்சிக்கு 8 முதல் 14 தொகுதிகள் கிடைக்கும்.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் சமாஜவாதி கட்சிக்கு 11 முதல் 17 தொகுதிகளும், தெலுங்குதேசம் கட்சி, பிஜு ஜனதா தளம், தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா 10 முதல் 16 தொகுதிகளும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் பதவிவேட்பாளர் நரேந்திர மோடிக்கு 31 சதவீத வாக்காளர்களும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்திக்கு 13 சதவீத வாக்காளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.