மக்களவைத் தேர்தலில் வாக்குப் பதிவு அதிகமாகியிருப்பது எனது பொறுப்புகள் அதிகரித்து வருவதற்கான அறிகுறி என்று பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.
ஒடிஸாவில் தேர்தல் நடைபெறும் பகுதியில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற தேர்தல்பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசியதாவது:
ஒடிஸாமாநிலத்தில் 10 மக்களவை தொகுதிகளுக்கு வியாழக் கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. அதில், அதிகவாக்குகள் பதிவாகியுள்ளன. இதன்மூலம் உங்கள் மீதான எனதுபொறுப்புகள் அதிகரித்து வருகின்றன. நீங்கள்காட்டும் அன்புக்காக எனது பங்களிப்பையும் சேர்த்து உங்களுக்கு திருப்பித்தருவேன்.
மத்திய அரசில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தி, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு பாடம்புகட்ட வேண்டும் என்று நாடுமுழுவதும் உள்ள மக்கள் விரும்புகிறார்கள்.நாடுசுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரஸ் இயக்கத்தை கலைத்து விட வேண்டும் என்பதே மகாத்மா காந்தியின் கனவாக இருந்தது. அதை தற்போது செய்வதற்கு மக்கள் எனக்கு உதவிசெய்ய வேண்டும். அப்போதுதான் இந்தியாவை ஊழலற்ற நாடாக்க முடியும்.
ஐ.மு.,கூட்டணி அரசு கருப்புமாயா ஜாலம் ஒன்றை வைத்துள்ளது. அதன் மூலம் நாட்டில் நிலக்கரி முதல் வேலை வாய்ப்புகள் வரை காணாமல் போய்விட செய்துள்ளது. தேர்தல்வரும் போதெல்லாம் காங்கிரஸ் தலைவர்கள் ஏழைகளை பற்றி பேசுவார்கள். அவர்களின் வீடுகளுக் கெல்லாம் சென்று, புகைப் படம் எடுத்துக் கொள்வார்கள். அவர்களைப் பொருத்த வரை ஏழ்மை என்பது தேர்தல்கோஷம், வறுமை ஒழிப்பு என்பது ஒருவித மனோபாவமாகும்.
உங்கள் மாநில முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு ஒடியா மொழியை எழுதவும், பேசவும், படிக்கவும் தெரியாது. அப்படிப்பட்டவரால் எப்படி உங்களுக்கு நல்லாட்சி தரமுடியும்? அவரது ஆட்சியை கடந்த 15 ஆண்டுகாலமாக நீங்கள் சகித்துக் கொண்டுள்ளீர்கள்.
அதேபோல் மத்தியில் காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையிலான ஐ.மு.,கூட்டணி அரசுக்கு 10 ஆண்டுகாலம் ஆட்சிசெய்ய அனுமதி கொடுத்தீர்கள். தற்போது என்னை ஆட்சிசெய்ய 60 மாதங்கள் அனுமதியுங்கள். மத்தியிலும், உங்கள் மாநிலத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தி காண்பிக்கிறேன் என்று மோடி பேசினார்.
இதன் பின்னர் சத்தீஸ்கர் மாநிலம் தம்தாரியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய மோடி, “காந்தி குடும்பத்தின் சிலரகசியங்கள் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜீத்ஜோகிக்கு தெரிந்திருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்.
அதனால்தான் அஜீத்ஜோகிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேர்தலில் போட்டியிட தொடர்ந்து வாய்ப்பு அளித்துவருகிறார். அதன்மர்மம் தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 16ஆம் தேதி தெரிந்துவிடும்’ என்று கூறினார்.
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.