முஸ்லிம்கள் உள்பட அனைவரும் எனது சகோதரர்கள்தான் , அரசியல் நோக்கங்களுக்காக சரணாகதி அடையமாட்டேன் அனைத்து பிரச்சினைகளிலும் அரசியல் சாசனத்தை பின்பற்றி நடப்பேன்.முதலில் நாடு தான். நமது நாட்டுக்கு ஒரே ஒரு மதநூல்தான். அது நமது அரசியல்சாசனம். என நரேந்திரமோடி செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி, ஏ.பி.பி. செய்திசேனலுக்கு நேற்று சிறப்புபேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–குஜராத்தின் முதல்மந்திரி என்ற வகையில் மாநிலத்தில் உள்ள 6 கோடி மக்களையும் இணைக்க என்னால் இயன்றளவுக்கு முயற்சி எடுத்திருக்கிறேன். இப்போது என்னிடம் தேசியமுக்கியத்துவம் வாய்ந்தபொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 125 கோடி மக்களையும் அடைவதற்கு நான் அனைத்து முயற்சிகளையும் பயன் படுத்துவேன். இது எனது பொறுப்பின் அங்கமாகும். நான் கட்டாயம் இதைசெய்வேன்.இது 100 அடிகள் நடைபோடுவதாகும். நான் 3 அடிகள் நடைபோடலாம். 5 அடிகள் நடைபோடலாம் அல்லது 7 அடிகள் நடை போடலாம். அது வேறு கதை. ஆனால் நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைவதற்கு நான் முயற்சி எடுக்கவேண்டும் என்பது எனது பொறுப்பு .
இது முஸ்லிம்களையும் உள்ளடக்கியதா என கேட்கிறீர்கள். உங்களின் இந்த வார்த்தைகள்படி நான்போகமாட்டேன். நீங்கள் என்னை (சர்ச்சைக்கு) இழுத்தாலும் கூட, நான் வரமாட்டேன். நான் என் நாட்டு மக்களை சந்திப்பேன். அவர்கள் என் நாட்டுமக்கள் என்றே புரிந்து கொள்கிறேன். அவர்கள் அனைவரும் (முஸ்லிம்கள் உள்பட) எனது சகோதரர்கள்.நீங்கள் விரும்புகிற சாயத்தை பூசிக்கொள்ளலாம். ஆனால் மோடி அந்த சாயத்திற்குள் செல்ல மாட்டார்.
தேர்தலில் நான் தோல்வியை தழுவினாலும் கூட, போகட்டும். இதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இத்தகைய வார்த்தைகளால், உங்களை போன்றவர்களின் மனநிலையினால் இந்நாடு சீரழிவை சந்தித்திருக்கிறது. உங்களைப் போன்றவர்களின் மனநிலைக்கு ஒரு போதும் நான் செல்லமாட்டேன். எனது சுதந்திரத்தில் இதுபோன்ற தாக்குதல்களை தயவுசெய்து நிறுத்துங்கள்.இந்நாடு அரசியல் சாசனத்தின் அடிப்படையில் இயங்கும். சண்டையிடுவதெல்லாம் தேர்தல்களில்தான். நாட்டை நிர்வகிப்பதில் அல்ல.
அனைத்து பிரச்சினைகளிலும் அரசியல் சாசனத்தை பின்பற்றி நடப்பேன்.ஆர்எஸ்எஸ். இயக்கத்தில் இணைந்து வளர்ந்தவன் என்றமுறையில் அதன் அடிப்படையில் பிரதமர் பதவியில் பணியாற்றுவீர்களா என கேட்கிறீர்கள். நான் உங்களுக்கு சொல்கிறேன். நான் அரசாங்கத்தை நடத்த போகிறேன். அரசாங்கம் என்பது அரசியல் சாசனத்தின் படி இயங்கும். அரசாங்கத்துக்கு ஒரே ஒருமதம்தான் உண்டு. முதலில் நாடு தான். நமது நாட்டுக்கு ஒரே ஒரு மதநூல்தான். அது நமது அரசியல்சாசனம். ஒரே ஒரு அர்ப்பணிப்புதான் அரசுக்கு உண்டு. அதுதேசத்தை நோக்கித்தான் அமையும். அரசு ஒரே ஒருரீதியில் தான் செயல்படும். அது அனைவருக்கும் ஒத்துழைப்பு, அனைவருக்கும் வளர்ச்சி என்பதாகும்.
குஜராத் இனக்கலவரங்களைப் பொறுத்த மட்டில் நான் சோதனையில் நின்றுவிட்டேன். எந்த சோதனைக்கும் நான்தயார். ஆனால் பொய்களுக்கு முன்னால், அரசியல் உள்நோக்கங்களுக்கு முன்னால் ஒரு போதும் சரணாகதி அடையமாட்டேன்.இந்த பிரச்சினையில் என்னை மத்தியகாங்கிரஸ் கூட்டணி அரசு சுப்ரீம் கோர்ட்டுக்கு இழுத்தது. இதுதொடர்பாக நான் இப்போது பேசக்கூடாது. விசாரணை என்று பார்த்தால் எந்தமுதல்–மந்திரியும் போலீசாரின் 9 மணி நேர விசாரணைக்கு ஆளானதில்லை. இது சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின்படி நடந்தது. சுப்ரீம்கோர்ட்டு அதைப் பார்த்தது. நான் அதில் நீடித்து நிலைத்து விட்டேன். எதிர்காலத்திலும் கூட நிற்பேன். நான் எந்த சோதனைக்கும் தயாராக இருப்பேன்.
வேட்புமனு தாக்கலின் போது அளித்த பிரமாண பத்திரத்தில் திருமணம் பற்றி குறிப்பிட்டதால் எழுந்தசர்ச்சை குறித்து கேட்கிறீர்கள். நான் எதனாலும் அதிர்ந்துபோக மாட்டேன். எனது வாழ்வில் அப்படி ஏதுமில்லை. அவர்களுக்கு (அரசியல் எதிரிகள்) பிரச்சினை ஏதும் இல்லை. எனவே அவர்கள் சர்ச்சையை தொடர்கிறார்கள். என்று நரேந்திர மோடி கூறினார்.
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.