அம்மாவின் 800 கோடியும் கமிஷனின் 144 தடையும்

 "ஜெ" பணத்தில் கரார்..வி.என் ஜானகிக்கு ஆதரவு தெரிவித்து..அரசியலை விட்டு போக.ஆர்.எம் வீரப்பன் நடத்திய பேரத்தில்… பேசிய தொகையை தராததால், ,இன்றைக்கு மூன்றாவதுமுறை சி.எம்.

இடது சாரிகளை கழற்றிவிட்டு, தவ்ஹீத் ஜமாத்துக்கு அடிபணிந்து, மோடியை தாக்கி பேசி தனது ஆதரவு ஓட்டுக்களை இழந்து, இப்படி ஏற்பட்ட சரிவுகளை சரிசெய்ய.."தனலெட்சுமியையே" நம்பினார்..

"தோல்வி ஜன்னியின்" உளரல்களை சரிசெய்யும் "மருந்து ' பணத்திடம் இருப்பதாக "ஜெ" நினைத்ததால், தொகுதிக்கு ரூ.20 கோடியென் 800 கோடியை "டிஸ்பெட்ச்" செய்தார்..

144 தடை உத்தரவு "சட்டம் ஒழுங்கை " பாதுகாக்க போடப்பட்டது என்றாலும், "ஜெ" அதை மிகவும் லாவகமாக பயன்படுத்திக்கொண்டார்..

தேர்தல் கமிஷனின் தீவிர செயல்பாடுகளையும் மீறி, ஆம்புலன்ஸ்களிலும், "ஆம்வே" பெட்டிகளிலும், பணத்தை கடத்தி ஆளும் கட்சி தனது தேர்தல் தில்லு முல்லுகளை, தொடங்கியது.

கைய்யில் ஏராளமாக பணம் இருப்பதால், சிறந்த திட்டமிடுதலை செய்து, கமிஷன் கண்ணில் மண்ணைத்தூவி, பூத்துக்கு 25,000/= ரூபாய் என ஆரம்பத்திலேயே பட்டுவாடாவை அதிமுக நடத்திவிட்டது.

இந்த விஷயத்தில் திமுக கூட கொஞ்சம் பிந்தங்கித்தான் இருந்தது.பொள்ளாச்சி, நீலகிரி, தஞ்சாவூர், வடசென்னை, தவிர திமுகவால், பணத்தில் ஆளும் கட்சிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

24 ம் தேதி, தேர்தலுக்கு 4 நாள் முன்னதாகவே "திருமங்கலம் ஃபார்மூலா" பணபட்டுவாடாவை அதிமுக தொடங்கியது..பாஜக உள்ளிட்ட தே.ஜ.கூ. தொண்டர்கள் பல இடங்களில் தடுத்து நிறுத்தியும், கைய்யும் களவுமக பிடித்துக்கொடுத்தும், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

மாநிலத்தின் மூத்த போலீஸ் அதிகாரியை சந்தித்து முரையிட்டபோது, "மே மாதம் 16ம் தெதியோடு தேர்தல் கமிஷன் மூட்டை கட்டிக்கொண்டு போய் விடும்..அதற்கு பிறகு மாநில அரசோடுதான் நாங்கள் குப்பை கொட்டியாக வேண்டும்"..என நடவடிக்கை எடுக்க முடியாது என்பதை சூசகமாக சொன்னார்.

பாஜக மூத்த தலைவரும் தென் சென்னை பாரளுமன்ற் வேட்பாளருமான இல.கணேசன் அவர்கள், பணபட்டுவாடாவை கண்டித்து காரசாரமான, ஆதராங்களுடன் கூடிய அறிக்கைவெளியிட்டார்..எந்த நடவடிக்கையும் இல்லை.ஒரே ஆறுதல் நாடுமுழுதும் "ஜெ" யின் சூதாட்டம் அம்பலமானது..

எல்லா எதிர்கட்சி தலைவர்களும் புகார் கொடுத்தும் போலீசோ, கமிஷனோ, எந்த ந்டவடிக்கையும் எடுக்க வில்லை.ஊர்டங்கு உத்தரவை பயன்படுத்தி, திருடன் ஊரை கொள்ளை அடித்தமாதிரி, 144 தடை உத்தரவை பயன் படுத்தி ஆளும் கட்சி, வாக்காளர்களுக்கு, பனபட்டுவாடாவை நிம்மதியாக நடத்தி முடித்தது.

இதனால் தேர்தல் முடிவுகளில் "பணத்தின் தாக்கம் " இருக்குமோ?…எல்லா வாக்காளர்களும், விலை போயிருப்பார்களோ?…

இக்கேள்விகளுக்கு பதில் ..பெட்டியை உடைத்து பார்த்தால்தான் தெரியும்.

வாக்குச்சாவடிகளில், "போலிங்" சிறப்பாக நடைபெற்றது…எல்லா ஊர்களிலும் இருந்து தே.ஜ.கூட்டணிக்கு ஆதரவாக வாக்குக்கள் பதிவாகி வருவதாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தது.மாலையில் இறுதி நிலவரமும் இதையே உறுதி செய்தது.

இருப்பினும் ஏன் சந்தேகம்? ஏன் கவலை? என நீங்கள் கேட்பது புரிகிறது..

மாநிலம் மூழுவதும் மோடி அலை வீசுவதை காணமுடிந்தது..குக் கிராமத்து பெண் வாக்காளரும், தாமரை சின்னத்தில் வாக்களித்தை கேட்க முடிந்தது..

அடுத்தநாள், வாக்கிங்கில், ஷாப்பிங்கில், டீ ஸ்டாலில், பஸ்ஸில், பேங்கில், பார்த்த மக்களெல்லாம், நமக்கு கை கொடுத்து வாழ்த்து சொன்னது, வெற்றியை உறுதி செய்தது..

இருந்தாலும் , இக்கட்டுரையை படித்து முடித்தவுடன், வரும் 16ந்தேதி வாக்கு எண்னும் போது, தே,ஜ.கூ.வின் வெற்றியின் வாக்கு வித்தியாசம் குறைந்தால்,..அதற்கு "அம்மாவின் 800 கோடி பணபட்டுவாடவும், அதை செவ்வனெ செய்ய உதவிய 144 தடை உத்தரவுமே" காரணமாக இருக்க முடியும்..

மக்கள் புத்திசாலிகள்.."வாங்கிக்கொண்டு", கொடுத்தவர்களை "வெளுத்து வாங்கி " விடுவார்கள்..

சந்திப்போம்..மே 16 இல்…வெற்றி செய்தியுடன்…

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...