18 மில்லியன் பேஸ்புக் நண்பர்களை பெற்று உலகின் இரண்டாவது பிரபலமான அரசியல்வாதியாக இந்திய பிரதமர் நரேந்திரமோடி இருக்கிறார் என்று சமூக வலைதளமான பேஸ்புக்கின் மூத்த அதிகாரி ஷேர்ல் சண்ட்பெர்க் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக் காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
உலகின் இரண்டாவது பிரபலமான அரசியல்வாதியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். அவருக்கு பேஸ்புக்கில் 18 மில்லியனுக்கும் அதிகமான நண்பர்களாக உள்ளனர். மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு தனது தாயாரிடம் ஆசிவாங்கிய படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவுசெய்து இருந்தார். தனிப்பட்ட முறையில் அதுதான எனக்கு பிடித்த புகைப்படமாகும்.
மோடியை போன்ற அரசியல்வாதிகள் சமூகவலைதளத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. பேஸ்புக்கின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா உருவாகி வருகிறது. பேஸ்புக் மூலம் வன்முறையை தூண்டுவதை ஒரு போதும் பொறுத்துக்கொள்ள முடியாது. இன்னும் பில்லியன் கணக்கான இந்தியர்களை பேஸ்புக்கில் இணைக்க வேண்டியுள்ளது.
பெரும்பாலான இந்தியர்கள் மொபைல் போனில்தான் பேஸ்புக்கை பயன் படுத்துகின்றனர். தேர்தலின் போது இந்தியாவின் பேஸ்புக் பயன்பாடு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. இந்தியா, உலகம் முழுவதும் தனது தொழில் பங்களிப்பை அளித்துவருகிறது. இவ்வாறு என்று அவர் தெரிவித்தார்.
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.