பிரதமர் நரேந்திரமோடி, அமெரிக்காவில் உரையாற்றவுள்ள நிகழ்வை இணையத்தில் நேரலைசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி பிரதமரான பின்னர் முதல்முறையாக செப்டம்பரில் அமெரிக்கா செல்கிறார். செப்டம்பர் 28-ல் அவர் அமெரிக்காவில் மேடிசன் சதுக்கத்தில் உரையாற்ற உள்ளார் . இந்நிகழ்வில் 20,000 பேர்வரை கலந்து கொள்கின்றனர்.
இதுதவிர அமெரிக்காவில் உள்ள பெரு நகரங்களில் சுமார் 20 நகரங்களுக்கு மோடி உரை இணையத்தில் நேரலைசெய்ய ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
மான்ஹாட்டனில் உள்ள மேடிசன் சதுக்கத்தில் 20,000 பேருக்கு மேல் கலந்துகொள்ள முடியாது . முன்னதாக, ஒருலட்சம் பேர் வரை கலந்துகொள்ள ஆர்வமாக உள்ளதாகவும் . எனவே அவ்வளவு பேருக்கு தகுந்த உள்ளரங்கு கிடைப்பது கடினம் என்பதால் நேரலையாக ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்பு வாஜ்பாய், மன்மோகன்சிங் உள்ளிட்டோர் அமெரிக்காவில் உரையாற்றியுள்ளனர் . ஆனால் அவர்கள் சிறிய அரங்கில் கூடியிருந்த சில நூறு வெளிநாடுவாழ் இந்தியர்கள் முன்பு மட்டுமே உரையாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.