லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. லார்ட்ஸ்டெஸ்ட் போட்டியில் இஷாந்த்சர்மா ஆவேசமாக பந்துவீச இங்கிலாந்து 223 ரன்களுக்கு சுருண்டு 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியை 1932-ம் ஆண்டில் இருந்து 17-வது முறையாக லார்ட்சில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிய இந்திய அணி இங்கு ஒரே ஒரு டெஸ்டில் மட்டுமே (1986-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில்) வெற்றி பெற்றிருந்தது. தற்போது, லார்ட்சில் 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.
லார்ட்சில் 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெற்றிபெற்றுள்ள இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டூவிட்டரில் கருத்து பதிவுசெய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி ” லார்ட்சில் நடைபெற்ற டெஸ்டில் அற்புதமான வெற்றியைபெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். சிறந்த செயல்பாட்டால் நாம் மிகவும் மகிழ்ச்சி மற்றும் பெருமை அடைந்துள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.