எனது எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய முன் வந்தும், பிரதமர் நரேந்திரமோடி, என்னை தடுத்துவிட்டார்," என, முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், ஹாசனில், நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தேவகவுடா பேசியதாவது:
'பாஜக., தன் சொந்தபலத்துடன், 280 இடங்களை பெற்றுவிட்டால், அரசியல் ரீதியாக ஓய்வுபெறுவேன்' என, லோக் சபா தேர்தல் பிரசாரத்தின் போது கூறியிருந்தேன். அதற்கு மோடியும், தும்கூரில் பதிலளித்திருந்தார். பா.ஜ., வெற்றிக்குபின், நானும், புட்ட ராஜுவும் டில்லிசென்று, மோடியை சந்தித்து பேசினோம்.
அப்போது, 'முதலில்கூறியபடி, எம்.பி., பதவியை ராஜினாமா செய்துவிடுகிறேன். அப்போதைய அரசியல் சூழ்நிலையில், நான், அவ்வாறுபேசியது உண்மை தான்' என்று கூறினேன். அப்போது, உடனடியாக எழுந்துநின்ற மோடி, 'கவுடா ஜி… நீங்கள் பிரதமராக நடத்திய ஆட்சி செய்திருந்த சாதனகளை பற்றி, உயர் அதிகாரிகளின் மூலம் தகவல்பெற்றுள்ளேன். நெருக்கடியான சூழ்நிலையில் எனக்கு, உங்களை போன்றவர்களின் ஆலோசனை, வழிகாட்டுதல் வேண்டும். நீங்கள், இனி, எந்த காரணத்துக்காகவும் ராஜினாமா செய்வது குறித்து பேசாதீர்கள்' என, வேண்டுகோள் விடுத்தார். அதனால்தான், நான் ராஜினாமா செய்ய வில்லை. இவ்வாறு, அவர் பேசினார்.
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.