44 வயதான பட்னாவிஷ், 197௦-ம் ஆண்டு நாபூரிலுள்ள கங்காதர்ராவ்-சரிதா தம்பதியின் மகனாகப் பிறந்தவர் பட்னாவிஷ். அப்பா கங்காதர் ஜனசங்கத்தில் தீவிரமாக இருந்தவர். மேல்சபை உறுப்பினராக இருந்தவர். அம்மா சரிதா, விதர்பா ஹவுசிங் கிரெடிட் சொசைட்டியில் இயக்குனராக இருந்தவர். சட்டக்கல்லூரியில் படித்தபோது, அரசியல் தீவிரமாக இயங்கத் தொடங்கினார் பட்னாவிஷ்.
முன்னாள் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர். வறட்சிப் பிரதேசமான விதர்பா பகுதியைச் சேர்ந்தவர் . மோடி மற்றும் அமித்ஷாவின் வேகத்திற்கு ஈடுகொடுத்து சட்டமன்றத் தேர்தலில் பம்பரமாகச் சுழன்றவர். முதன்முதலில் நாக்பூர் மாநகராட்சி கவுன்சிலரானபோது, இவரது வயது 21. ஆனால், அதற்குமுன் கல்லூரிக் காலத்திலேயே பா.ஜ.க. மானவரனியில் சேர்ந்து சுவரில் பெயின்ட் அடிப்பது போஸ்டர் ஓட்டுவது என்று ஒரு சராசரித் தொண்டனாகவே தனது அரசியல் வாழ்க்கையத் தொடங்கினார். விவேகானந்தரின் தத்துவ போதனைகளில் ஆர்வமுள்ள இவர், ஆக்சிஸ் வங்கியில் மேலாளராக இருந்தவர் .
இது மட்டுமில்லாமல், நாக்பூரில் உள்ள பிரபல துணிக்கடைக்கு மாடலாகவும் இருந்திருகிறார். இதனால் உண்டான 'டிரெஸ் சென்ஸ்', இப்போதுவரை இவரிடம் பிரதிபலிக்கிறது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இவரை, 'மாடலிங் பாளிடீசியன்' என்றுதான் அழைப்பாராம். அவரைப் போலவே, ஐவரும் மாராத்தியிலும் ஹிந்தியிலும் கவிதை எழுதுவார் என்பது இன்னொரு சிறப்பு. தனது 27-வது வயதில், நாக்பூர் தென்மேற்குத் தொகுதியில் போட்டியிட்டு, முதன்முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். தற்போது 4-வது முறையாக, இதே தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
மகாராஷ்டிராவின் 2-வது இளம் முதல்வர் பட்னாவிஷ். சரத்பவார் தனது 38-வது வயதில் முதல்வராகப் பதவியேற்றவர். புதிய முதல்வாருக்கு மகாராஷ்டிராவின் எதிர்கால வளர்ச்சி, விதர்பாவின் வறட்சி மீட்பு, சுதேசி பொருளாதாரம் உட்பட பல பிரச்சனைகள் காத்திருக்கின்றன.
இவரது மனைவி அம்ருதா தற்போது நாக்பூரில் ஆகஷிஷ் வங்கியில் துணைத் தலைவர். கணவர் பதவியேற்றதும் மும்பைக்கு டிரான்ஸ்பர் வாங்கப் போவதாகக் கூறியிருக்கிறார். இவர்களுக்கு 5 வயது உள்ள ஒரு மகள் உள்ளார்.
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.