ஆந்திர மாநில முன்னால் முதல்வர் கிரண்குமார் ரெட்டி பாஜக.,வில் சேர திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்குமார்ரெட்டி மாநில பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசில் இருந்து விலகினார். அவருடன் மூத்தமந்திரிகள் சிலரும் காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்தார்.
பின்னர் கிரண்குமார் ரெட்டி ''ஜெய்சமைக்த் ஆந்திரா''என்ற புதிய கட்சியை தொடங்கினார். ஆந்திர சட்டசபை தேர்தலில் இந்தகட்சி படுதோல்வியை அடைந்தது.
தேர்தலுக்கு பிறகு அரசியலில் தீவிரம்காட்டாமல் இருந்த கிரண்குமார் ரெட்டி பாஜக வில் சேர திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது
தென் மாநிலங்களில் பாஜக.,வை வலுப்படுத்த தலைவர் அமித்ஷா திட்டமிட்டு உள்ளார். இதற்காக அவர் தென்மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்ய உள்ளார். விரைவில் ஆந்திரா பயணத்தை அவர் மேற்கொள்ள உள்ளார்.
அப்போது அவரது முன்னிலையில் கிரண்குமார்ரெட்டி பா.ஜனதாவில் சேருகிறார். அவருடன் முன்னாள் மந்திரி சத்திய நாராயணாவும் பாரதீய ஜனதாவில் இணைய உள்ளார்.
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.