“நான் அனைவர் பிராதிநிதி”

 "நான் அனைவர் மும்பை பாஜக எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் விஜயபாரததிடம் தொலைபேசியில் பேட்டியளித்தார். அப்போது தான் அனைவரின் பிரதிநிதி என்று தெரிவித்தார்."

மும்பை அரசியலுக்கு எப்படி வந்திர்கள்?

25 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய 18 வயதில் துறைமுக கூலி வேலையில் சேர்வதற்காக மும்பை வந்து சேர்ந்தேன். அதன்பின்னர் மத்திய ரயில்வேயில் சரக்கு கையாளும் முகவரிடம் பணியாற்றினேன். சில ஆண்டுகளுக்கு பின்னர் நானே முகவர் ஆனேன். அதனால் பொருளாதார நிலையில் சற்று உயர்ந்தேன். என்னுடைய உழைப்பினால் ஈட்டிய பொருளை கொண்டு, மும்பை தமிழ் மக்களுக்கும் மற்றவர்களுக்கும் பல உதவிகள் செய்தேன். மும்பையில் சில வருடங்களுக்கு முன்பு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் போது நண்பர்கள் பலருடன் இணைந்து உயிருக்குப் போராடியவர்களை மீட்டு மருத்துவமனயில் சேர்த்தேன். அந்த ஆபத்தான காலத்தில் துணிச்சலுடன் செய்த என்னுடைய பணிகளை கண்ட மக்கள் 'கேப்டன்' என அழைக்கத் தொடங்கினர். இந்த சேவையை பாராட்டி அப்போதைய மகாராஷ்டிர மாநில ஆளுநர் எஸ்.சி. ஜமீர் அவர்கள் எனக்கு 'வீரத் தமிழன்' என்ற விருதை வழங்கினார். இன்றும் என்னுடைய பிரதான பணி சமூக சேவை தான். மக்கள் அளித்த ஆதரவினால் 16௮வது வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். தற்போது மும்பை பாஜகவின் செயலாளராக செயலாற்றி வருகிறேன்.

மராட்டியர்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள உறவு எப்படி உள்ளது?

பல ஆண்டுகளுக்கு முன்பு பிரச்சினை இருந்தது என்றாலும் இப்போது முற்றிலும் இல்லை என்றே சொல்லலாம். எனது தொகுதியில் தமிழர்களின் எண்ணிக்கை 8 ஆயிரம் தான். மராட்டியர்கள், சீக்கியர்கள், இதர மாநிலத்தவர்கள் என 2 லட்சத்திற்கும் மேல் உள்ளனர். பல மொழி, மாநிலத்தை சார்ந்தவர்கள் இணைந்தே என்னைத் தொடர்ந்து ஆதரித்து வருடிரார்கள். நான் அனைத்து மக்களின் பிரதிநிதி, எல்லோருடைய நலனுக்காகவும் நான் பாடுபடுவேன். என்னுடைய பதவியை பயன்படுத்தி சேவைகளை துரிதமாகத் தொடர முற்படுவேன்.

உங்கள் தொகுதியில் உள்ள முக்கியமான பிரைச்சினைகள் என்ன? அதற்கு தாங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பிரதிஷா நகர், சங்கம் நகர், காமராஜ் நகர், கோபிகாட் போன்ற பகுதிகளில் குடிசை வீடுகள் அதிகமாக உள்ளன. மழைக்காலங்களில் அங்கு தண்ணீர் தேங்கி சுகாதார கேடு உருவாகும். மாநகராட்சி உறுப்பினராக இருந்து இந்த பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வை கொண்டு வர பாடுபட்டிருக்கிறேன். இப்போது கிடைத்துள்ள சட்டமன்ற உறுப்பினர் பதவி மூலம் அப்பணிகளை செய்து முடிக்க முடியும் என்று நம்புகிறேன்.

மேலும் 2 லட்சம் பொதுமக்கள் வசிக்கும் இந்த தொகுதியில் ஒரே ஒரு அரசு மருத்துவமனை தான் உள்ளது. கூடுதலாக சில அரசு மருத்துவமனைகள் கொண்டு வர பாடுபடுவேன். கல்வியிலும் பின்தங்கியுள்ள இப்பகுதியில் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்க முயறசி செய்வேன்.

உங்கள் வெற்றிக்கு காரணம் என்ன?

எனது வெற்றிக்கு காரணம் பாரத பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர்கள் மேல் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை, தமிழக பா.ஜ.க தலைவர்கள் மட்டுமல்லாமல் பல மாநில பா.ஜ.க தலைவர்கள் செய்த பிரச்சாரம், முழு ஈடுபாட்டுடன் எந்த பிரதிபலனும் எதிர்பாராது செய்த என்னுடைய சேவைக்கு மக்கள் அளித்த ஆதரவு என்றே கூறலாம்.

கணியன் பூங்குன்றனார் கூறிய "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற வரிகளுக்கு ஏற்ப எல்லோர் நலனுக்காகவும் உழைத்ததின் பலனே இப்போது என்னை சட்டமன்ற உறுப்பினராக்கியது. மக்களுக்கு சேவை செய்யக்கூடிய பொறுப்பு கூடியுள்ளது. எப்போதும் போலவே இப்போதும் என்னை மக்கள் எளிதில் அனுகலாம்.

பா.ஜ.க உங்களை எதனால் ஈர்த்தது?

நாட்டைப்பற்றி உயர்ந்த கண்ணோட்டத்துடன் தேசத்தையும் தெய்வீகத்தையும் இருகண்களாக போற்றி வருவது பா.ஜ.க ஒவ்வொரு மனிதனும் நாட்டிற்காக வாழ்வதற்கு உந்துதலாக பாஜக உள்ளது. எனவே எனக்கு பாஜக பிடித்தது.

ஆர்,எஸ்.எஸ் குறித்து…

தேசத்திற்காக எவ்வித பிரதிபலனும் எதிர்பாராது சேவை செய்கின்ற அமைப்பு. நாட்டில் NSS,NCC, போன்று தேசத்தை பாதுகாக்கும் தற்காப்பு படை ஹிந்துக்களுக்கு மட்டுமே என்பதெல்லாம் பொய். ஒவ்வொரு மனிதனும் நாட்டிற்காக பாடுபடவேண்டும் என்று சொல்கின்ற அமைப்பு.

உங்களுடைய தொடர்ச்சியான சேவைப் பணிகள் என்னென்ன?

ஏழைக் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது அவர்களின் கல்விக்கு உதவுவது, பள்ளிகளில் விளையாட்டு திடல் ஏற்படுத்துவது. குடிநீர் மற்றும் கழிவுநீர் பிரச்சனைகள் தீர்ப்பது போன்ற பல்வேறு சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறேன்.

நீங்கள்தான் முதல் தமிழ் எம்.எல்.எ வா?

மாநகரை பொறுத்த வரையில் எனக்கு முன்பாக ரவிராஜா, அண்ணாமலை போன்றவர்கள் மும்பை மாநகராட்சியின் உறுப்பினர்களாக தேர்ந்தேடுக்கப்ட்டுள்ளர்கள் அந்த வரிசையில் நானும் தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கிறேன். எம்.எல்.ஏவாக இதற்கு முன்பாக சுப்பிரமணியம் என்றொருவர் தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கிறார். அவர் தமிழரா, தெலுங்கரா என்பது தெரியவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நான்தான் மகாராஷ்டிரத்தின் முதல் தமிழ் எம்.எல்.ஏ. என்று நினைக்கிறேன்.

உங்களது வெற்றிக்கு கட்சியினர், உறவினர்கள் பங்கு குறித்து?

தமிழகத்தலிருந்து எங்களது கட்சிக்காரர்கள் குறிப்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் எச்.ராஜா மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரத்திற்கு வந்து உதவினர். எல்லாவற்றையும் விட மும்பையின் பிற மாநிலத்தவர்கள் குஜராத்திகள்,மராட்டியர்கள்,தெலுங்கர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரின் ஆதரவையும் பெற்றுதான் நான் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன்.

உங்கள் தொகுதியில் மட்டும்தான் சேவை புரிகிறீர்களா அல்லது தமிழர்கள் அதிகம் வசிக்கும் அனைத்து பகுதியிலும் சேவை செய்கிறீர்களா?

மும்பையில் மட்டுமல்ல தமிழர்கள் வசிக்கும் அனைத்து பகுதியிலும் எங்கெல்லாம் பிரச்சனைகள் எழுகிறதோ உதவி பணிகள் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் சென்று உதவி வருகிறேன். இதில் மாநிலம், மொழி எல்லாம் பார்ப்பதில்லை. அனைத்து மக்களையும் எனது சகோதரர்களாகத்தான் பார்க்கிறேன்.

நன்றி : விஜய பாரதம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

மருத்துவ செய்திகள்

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...