இன்றைய இந்தியாவில் குப்பையின் நிலை என்ன? வீட்டிலிருந்து வேலை செய்பவர் வெளியில் செல்லும் போது தெரு முனையில் இருக்கும் குப்பைத் தொட்டியில் வீசி எரிந்து விட்டுச் சென்றுவிடுவர். சில சமயங்களில் அது தொட்டிக்குள்ளும், பல சமயங்களில் தொட்டிக்கு வெளியயும் சிதறுண்டு கிடக்கும். நாய்கள், மாடுகள், ஆடுகள், மற்றும் அணில் போன்றவை எல்லாவற்றையும் இழுத்துப் போடும். குப்பை லாரி
போய் புறநகர்ப் பகுதியில் பொதுவான நிலங்களில் கொட்டிக் குமித்து விடுவர். Energy Research Institute இந்த நிலம் பற்றி ஒரு கணிப்பு சொல்கிறது. அதாவது 2047-ல் நகராட்சியின் முன்ஷிபல் கழிவுகளுக்காகத் தேவைப்படும் நிலம் சுமார் 1400 சதுர கி.மீ. ஆகும்.
ஆறுகள், குளங்கள், குட்டைகள், வாய்க்கால்கள் உள்ள பெருநகரங்கள் அவற்றில் எந்த மனசஞ்சலமும் இன்றி குப்பைகளைக் கொட்டிவிடுவார். டில்லியின் யமுனை நதி இதற்கு மிகச் சிறந்த உதாரணம். வெள்ளை வெளேர் என்ற படிமம் தான் யமுனையில் பார்க்க முடிகிறது. யமுனை ஆறு ஒடுவதில்லை. எங்கும் வெள்ளைநிற நீச்சுப் படிமம் தான். இந்தப் பகுதியில் யமுனையில் ஜீவராசிகளே இல்லை என்றால் கழிவுகளின் நச்சுத் தன்மையை ஊகிக்க முடிகிறது தானே?
இதைவிட, நிலத்தில் கொட்டி வைப்பது பரவாயில்லை எனத் தோன்றலாம். திருச்சியில்,அரியமங்கலம் பகுதியைத் தாண்டிதான் நான் அலுவலகம் செல்ல வேண்டியிருக்கிறது. அந்த இடத்தில், இத்தகைய லேண்ட் பில் மிகப் பெரியது ஒன்று உள்ளது. அது எத்தகைய பிரச்சினைகளைத் தருகிறது என்பது அங்கு வாழ்வோரிடமும், எங்களைப் போன்று அதைக் கடந்து வருவோரிடமும் தான் கேட்க வேண்டும். வேனிற்காலத்தில், குப்பை எரிய ஆரம்பித்தால், அந்தப் பகுதி முழுக்க புகை மண்டலமாகக் காட்சி தரும். விபத்துக்கள் நேரும். சுவாசமுட்டல் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் பல உபாதைகள். இப்படி 3, 4 நாட்கள் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தால், சூடு, புகை, இவற்றால் உண்டாகும் பிரச்சனைகளை எண்ணிப் பாருங்கள். நிலத்தடி நீர் பாதிப்படைகிறது. சென்னையில் பள்ளிக் கரணை சதுப்பு நிலங்களில் இருந்த தாவரங்கள், வந்து தங்கிய அயல்நாடு சிறகு விருந்தாளிகள், என்று எல்லாவற்றையும் அழித்து நிற்கிறது குப்பை மலைகள். நம் ஒருவர் 0.6 கி கழிவுகளை ஒவ்வொரு நாளும் வெளியேற்றுகிறோமாம். பூமித் தாய் தாங்குவாளா?
நாம் ஏன் குப்பைகளைக் குறிப்பது பற்றியோ, மறுபயன்பாடு பற்றியோ, மறுசுழற்சி செய்வது பற்றியோ தீவிரமாக நினைக்க ஆரம்பிக்கக் கூடாது? இந்தியாவின் 3,119 டவுன்கள் மற்றும் நகரங்களில் வெறும் 209 நகரங்களில்தான், சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளனவாம். இந்தியாவில் தற்பொழுது 6000 மில்லியன் லிட்டர் கழிவு நீரை ஒரு நாளில் சுத்திகரிக்க இயலுமாம். ஆனால் ஒவ்வொரு நாளும், நாம் 29,000 மில்லியன் லிட்டர் கழிவு நீரை வெளியேற்றுகிறோம். கங்கையில் 100 நகரங்கள் சுத்திகரிக்காத கழிவு நீரைக் கொட்டுகின்றன. நம் மனசாட்சி எங்கே?
ஒவ்வொரு வருடமும் 226.6 மில்லியன் டன் திடக் கழுவுகளை நாம் இந்தியாவில் உற்பத்தி செய்கிறோம். அதில் வேதனையான விஷயம் என்னவென்றால், 40% திடக் கழிவுகள் அகற்றப்படுவதே இல்லையாம். இவற்றில் ஈக்கள், கொசுக்கள், பாச்சை, எலிகள் என்று வகைவகையான உயிர்கள் உண்டாவதால் வயிற்றுப் போக்கு, காலரா, பாராடைபாய்டு, வயிற்றிரைச்சல், மஞ்சள் காமாலை, போலியோ, அமீபிக் டிசன்ட்ரி, புற்றுநோய், போன்ற நோய்களாலும் அநியாயச் சாவுகளினாலும் நாம் பாதிக்கப்படுகிறோம்.
நன்றி ஒரே நாடு
திருமதி. பூமாகுமாரி
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.