தமிழகத்தில் கட்சியை பலப்படுத்தாமல் ஓயமாட்டேன்

 பாஜக பலவீனமாக உள்ள தமிழகம், கேரளம் உள்ளிட்ட கடலோர மாநிலங்களில் கட்சியை பலப் படுத்தாமல் ஓயமாட்டேன் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சூளுரைத்துள்ளார்.

 

தமிழில் பேச முடியாததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் தமிழ் கற்றுக்கொண்டிருக்கிறேன். விரைவில் தமிழில் பேசுவேன்.

சென்னையை அடுத்த மறைமலை நகரில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்குப் பெரும்பான்மை வேண்டும் என தமிழக மக்களிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், பாஜக கூட்டணிக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. அதேநேரத்தில் 19 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இதற்காக தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் மூலம் 30 ஆண்டுகளுக்குப் பின் ஒரு தனிக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. இதனால் நிலையான ஓர் அரசு நாட்டுக்கு கிடைத்துள்ளது"" என்று கூறி தனது பேச்சைத் தொடங்கினார் அமித் ஷா.

ஜார்க்கண்ட் மாநில தேர்தல்பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடந்த 6 மாதகால பாஜக ஆட்சியில் என்ன சாதித்தீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

6 மாதங்களில் என்ன செய்தோம் என்பதைச்சொல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், 60 ஆண்டு கால நேருகுடும்ப ஆட்சியில் என்ன செய்தார்கள் என்பதை அவர் விளக்க வேண்டும்.

கடந்த 6 மாத கால நரேந்திரமோடி ஆட்சியில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் விளைவாக பணவீக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது.

ராகுல்காந்தி பிறந்தது முதல் வெள்ளிக் கரண்டியில் பால் அருந்தியவர். ஆனால், பிரதமர் மோடி தேநீர் விற்றவர். அதனால் அவருக்கு விலைவாசி உயர்வின் துயரம்புரியும்.

கடந்த 10 ஆண்டுகால காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஒரு முறை கூட பெட்ரோல், டீசல் விலை குறைந்ததில்லை. ஆனால், கடந்த 6 மாதங்களில் 10 முறை பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ரூ.1,000 மிச்சமாகியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியிலும் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இப்போதும் துப்பாக்கிச் சூடு நடக்கிறது என ராகுல் பேசியுள்ளார். உண்மைதான். காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் ராணுவம் மட்டுமே துப்பாக்கிச்சூட்டை நடத்திக் கொண்டிருந்தது. இப்போது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கியால் சுட்டால், அதற்கு பதிலடியாக இந்திய ராணுவத்தின் பீரங்கிக்குண்டு பாய்கிறது. இந்த வித்தியாசம் ராகுல் காந்திக்குப் புரியாது.

வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவதற்காக "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தை தொடங்கியுள்ளோம். இதன்மூலம் உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவில் முதலீடுசெய்ய முன்வந்துள்ளன. இதனால், கோடிக் கணக்கான இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஊழல், ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல், நிலக்கரி சுரங்கஊழல், காமன்வெல்த் விளையாட்டில் ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் என பட்டியலிட்டு கொண்டே போகலாம்.

10 ஆண்டுகளில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசில் சுமார் ரூ.12.5 லட்சம் கோடி மக்களின் பணம் கொள்ளையடிக்க பட்டுள்ளது. இதற்காக மக்களுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டியிருக்கும்.

5 ஆண்டுகளுக்குப் பிறகு வரும்தேர்தலில் மக்களைச் சந்திக்கும்போது மோடி ஆட்சியின் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இருக்காது என உறுதி கூறுகிறேன்.

மோடி ஆட்சியில் பலமாற்றங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன. விரைவாக முடிவெடுக்க "டீம் இந்தியா' என்பதை பிரதமர் வலியுறுத்தி வருகிறார்.

மத்திய அரசு மட்டும் முடிவெடுக்காமல், மாநில முதல்வர்களுக்கும் பங்களிப்பு இருக்கும் வகையில் திட்டக்குழுவுக்கு பதில் புதிய அமைப்பு உருவாக்கப்படவுள்ளது.

கடந்த 6 மாதகால மோடி ஆட்சியின் நிர்வாக திறமையால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதத்தில் இருந்து 5.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் 40 சதவீத குடும்பங்களுக்கு வங்கிக்கணக்கு இல்லை. ஆனால், கடந்த 6 மாதங்களில் 8 கோடி பேருக்கு புதிதாக வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

பாஜக மிகப்பெரிய ஜனநாயக கட்சி. வாரிசு அரசியலுக்கு இங்கு இடமில்லை. சாதாரணமானவர்கள் உயர் பொறுப்புகளுக்கு வரமுடியும். தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, அஸ்ஸாம், ஒடிஸா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் பாஜக வலுவாக இல்லை. இந்நிலையை மாற்றினால் தான் மத்தியில் நீண்ட காலத்துக்கு ஆட்சியில் இருக்கமுடியும்.

தமிழகத்திலும் பாஜக வலுவாக இல்லை. தமிழகத்தில் சுமார் 60 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. ஒருமையத்துக்கு 100 உறுப்பினர்கள் வீதம் 60 லட்சம் உறுப்பினர்களை சேர்க்கவேண்டும். இந்தப் பணியில் தமிழக பாஜகவினர் கடுமையாக உழைக்கவேண்டும்.

தமிழகத்தை திமுக, அதிமுக என இரண்டு திராவிட கட்சிகளும் தொடர்ந்து ஆட்சிசெய்து வருகின்றன. இதற்கு முடிவுகட்ட வேண்டுமானால் பாஜக.,வை பலம்பொருந்திய கட்சியாக மாற்றவேண்டும். 60 லட்சம் உறுப்பினர்களை சேர்த்தால், இது சாத்தியமாகும்.

தமிழக பாஜக தொண்டர்கள் அனைவரும் மோடியின் தூதுவர்களாக இந்த பணியில் ஈடுபடவேண்டும். அப்போது தான் தமிழகத்தில் பாஜக ஆட்சியை ஏற்படுத்த முடியும்.

இலங்கை முதல் உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் கெளரவமாக இருக்கவேண்டும். தமிழ், தமிழர், தமிழகத்தின் கெளரவம் காக்கப்பட வேண்டுமானால் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையவேண்டும் என்றார் அமித் ஷா..

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...