4 குழந்தை பெற்றால் என்ன குற்றம்?

 உ.பி. மாநிலம் உன்னோவா லோக்சபா தொகுதியின் M.P சாஷி மகராஜ்… இவர் மனதில் பட்டதை மறைக்காமல் பேசுபவர். இவர் பேசுவதை "மறைந்து நின்று" பார்த்து, "மறந்தும்" உண்மை கலக்காமல். தலைப்புச் செய்தியாக வெளியிடுவது பத்திரிக்கைகளுக்கு தலையாய கடமை…ஆகி வருகிறது

கோட்சே பற்றி இவர் பேசிய பேச்சை "பூதமாக்கி" பெரிதுபடுத்தி ஒரு வாரம் "செய்தியாக ஓட்டினார்கள்"… நிரஞ்ஜனா ஜோதி என்கிற தலித் இன பெண்,— சாமியாரான இவரது பேச்சுக்களுக்கு "மதவாத உரை" எழுதி "ஒரு மாதம்" அமர்களப்படுத்தினார்கள். தற்போது சாஷி மகராஜ் "இந்துக்கள் 4 குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்" என்கிற பேச்சை அரசியலாக்கி ஊடகங்கள் "விவாத மேடைகளில்" அரங்கேற்றி வருகிறார்கள்!

அதிலும் கூட "பாதி பேச்சை மட்டும் பிரசுரித்து" மீதியை மறைத்து விவாதம் நடத்துகிறார்கள்! ஆம் பாதியை மட்டும் போட்டால் தான்…. மீதியை மறைத்தால்தான்… "விவாதமே" நடத்த முடியும்.

சாஷிமகராஜ்… பேசியது என்ன. உ.பி. மாநிலம் மீரட் நகரில்.. ஒரு இந்து சாமியார்கள் மாநாட்டில் பேசியுள்ளார்.

"நாம் இந்துக்கள்… நாம் இருவர் நமக்கு ஒருவர்" என்கிற கொள்கையை கடைபிடித்து ஒரு குழைந்தை மட்டும் பெற்றுக் கொள்கிறோம். நாம் 4 குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். ஒரு குழந்தையை ஆன்மீகத்துக்கு தத்துக் கொடுத்து சன்னியாசி ஆக்க வேண்டும். இன்னொரு குழந்தையை -நாட்டுக்கு தத்துக் கொடுத்து ராணுவ வீரனாக்க வேண்டும். குடும்பத்திற்கு ஆண் பெண் என இரண்டு குழந்தைகள் வைத்துக் கொள்ள வேண்டும்.

இதில் என்ன தவறு இருக்கிறது. உடனடியாக இதற்கு எதிர்ப்பு….. மாபெரும் எதிர்ப்பு…. காங்கிரஸின் அபிஷேக் மனு சிங்வி கண்டனம்… "உடனடியாக நரேந்திர மோடி இதற்கு பதில் சொல்லியாக வேண்டும். ராஜ் நாத் சிங்கும் நரேந்திர மோடியும் ஏன் மெளனம் காக்கிறார்கள்?" என தொடர்ந்தது மீடியாக்களின் செய்திகள்….

முதலில் ஒரு சில ஊடகங்களில் சாஷி மகராஜ் 4 குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்" என்று பேசப்பட்டதாக மட்டும் செய்திகள் வந்தது. இதன் மூலம் சாஷி மகராஜையும் பாஜாகவையும், மோடி அரசையும் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு எதிராக பேசுவதாகவும் இந்திய மக்கள் தொகை கொள்கைக்கு எதிராக பேசுவதாகவும் குற்றம் சொல்ல வழிவகை செய்ய முயன்றார்கள்…

மாறாக முழு பேச்சான, "ராணுவத்துக்கு ஒருவர், ஆன்மீகத்துக்கு ஒருவர், குடும்பத்திற்கு ஆணொன்று பெண்ணொன்று என்று சொன்னால் குற்றம் காண முடியாதல்லவா?

எனவே இது "செலக்டிவ் அட்டாக்" தொடர்ந்து ஊடகங்களும் காங்கிரசும் இதைத்தான் செய்து வருகிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால், இது சம்பந்தமான பாஜக மற்றும் மோடி அரசை கண்டிக்கும் வகையிலான ஊடகங்களின் "விவாதங்களில்" முஸ்லீம் கட்சியினரும் கலந்து கொண்டு சாஷி மகராஜின் 4 குழந்தை பேச்சை கண்டிக்கின்றனர்.

"4 மனைவிகளின் 14 குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் இவர்களை கண்டிக்க ஊடகங்களும் மற்ற கட்சிகள்ம் வராது" என்கிற தெம்பு அவர்களிடம் உள்ளது.

மோடி அரசின் வளர்ச்சிப் பாதையின் வேகம், ஊழலற்ற நிர்வாகம், ஊடகங்கள் கண்களை உருத்துவதால், குறைகள் கண்டுபிடிக்க வாய்ப்புகளே கிடைக்கததால், அர்த்தமற்ற, ஆக்க பூர்வமற்ற "டீக்கடை" பேச்சுக்களை, "திண்ணை லாவணிக் கச்சேரிகளை".. காங்கிரசும் ஊடகங்களும் நடத்தி வருகின்றனர்.

இன்னும் கொஞ்சகாலம் ஊடகங்கள் நிலை பரிதாபம்தான். காங்கிரஸ் கொடுத்த மாதிரி "ஊழல்" செய்திகள் பாஜக கொடுக்காத்தால் வந்த ஏக்கம் இது!

ஆனால்,கொஞ்ச காலத்துக்குள் ஊடகங்கள் வளர்ச்சி பற்றி செய்தி வெளியிடும் கட்டாயத்துக்கு மக்களால் தள்ளப்பட்டுவிடும். அப்போதே..அப்போது மட்டுமே ஊடகங்களின் ஆக்க பூர்வ செயல்பாடுகள் ஆரம்பமாகும்.

நன்றி ; எஸ்.ஆர். சேகர்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

இந்தியாவில் கூட்டுறவு துறையை வ ...

இந்தியாவில் கூட்டுறவு துறையை வலுப்படுத்தி வருகிறோம்-மோடி பெருமிதம் '' இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறோம், '' ...

மருத்துவ செய்திகள்

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...