பிரதமர் மோடி அமல்படுத்திய குஜராத் வளர்ச்சி மாதிரியை மற்ற மாநிலங்களும் பின்பற்றினால், எல்லோரும் பயன் அடைவார்கள் என்று அமெரிக்க அமைச்சர் கூறினார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில், 'எழுச்சிமிகு குஜராத் முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு' நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்பதற்காக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி இந்தியாவுக்கு வந்துள்ளார்.
காந்தி நகரில், செய்தியாளர்களிடம் இதுகுறித்து அவர் பேசியதாவது;
பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநில முதல்-அமைச்சராக இருந்தபோது, முதலீட்டாளர்களுக்கு சாதகமான கொள்கைகளால், குஜராத்தை முன் உதாரண மாநிலமாக மாற்றினார். அதை நாட்டின் பிறமாநிலங்களும் பின்பற்றினால், நாம் அனைவரும் பயன் அடைவோம்.
கடந்த 2 நாட்களாக, எழுச்சிமிகு குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் நடந்துவருவது என்னை கவர்ந்துள்ளது. அமெரிக்க முதலீட்டாளர்கள் மட்டுமின்றி, பலநாடுகளின் முதலீட்டாளர்களும் குஜராத் அரசுடன் பேச்சு நடத்திவருகிறார்கள்.
இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தையிலும், ஒபாமா வருகைக்கான ஏற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டதற்காக, பிரதமர் மோடிக்கு நன்றிதெரிவித்து கொள்கிறேன். குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வதற்கு, ஒபாமா பெருமைப்படுகிறார்.
இந்தியாவுடனான ஒத்துழைப்பை அதிகரிப்பது மட்டுமின்றி, தீவிரவாதம், கடற்கொள்ளை, கடல் சார் பாதுகாப்பு, அணு சக்தி ஒத்துழைப்பு, அணு ஆயுதபரவல் தடை ஆகிய விவகாரங்களிலும் இந்தியாவுடன் இணைந்துசெயல்பட அமெரிக்கா ஆர்வமாக இருக்கிறது. இந்தாண்டு இறுதியில், பாரீசில், பருவ நிலை மாற்றம் தொடர்பாக, இந்தியா-அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கருதுகிறோம். இது பற்றியும் நரேந்திர மோடியும், ஒபாமாவும் பேச்சு நடத்துவார்கள்.
இலங்கையில், மனிதஉரிமை மீறல்கள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இத்தகைய சவால்களுக்கு தீர்வுகாண இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம்.
புதிய இலங்கை அதிபருடன் நான்பேசினேன். சவால்கள் இருந்த போதிலும், அங்கு தேர்தல் நடந்து, புதிய அரசை மக்கள் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுத்தது நல்லவிஷயம். இது ஒரு புதிய தொடக்கத்துக்கு வழிவகுக்கும் என்று ஜான் கெர்ரி கூறினார்.
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.