நடந்து முடிந்த தி.மு.கவின் 14வது பொதுக் குழுவில், 11வது முறையாக தலைவராக தேர்வு செய்யப்பட பின்னர், பேசிய கலைஞர், தமிழ்நாட்டில் தி.மு.கவை வீழ்த்தி விடலாம் என்று பாரதிய ஜனதாவினர் எண்ணுகிறார்கள். அந்த எண்ணம் பலிக்காது என்று பேசியுள்ளார். இந்த பேச்சு தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து வருகிறது, அதுவும் வேகமாகவே வளர்கிறது என்பதையே காட்டுகிறது. பாரதிய ஜனதா கட்சி, எந்த கட்சியையும் அழித்து வளர விரும்பவில்லை. தமிழகத்தில் 60 சதவீத மக்கள் எந்த கட்சியிலும் சேராமல், தேர்தலுக்கு தேர்தல் தங்களது நிலையை மாற்றிக் கொள்பவர்கள். அதாவது, தற்போதைய சூழலில் யார் வந்தால் நல்லது என்று பார்க்கின்ற குணத்துடன் வாக்களிக்கிறார்கள்.
இதன் காரணமாக திமுக, அஇஅதிமுக மாறி மாறி ஆட்சிக்கு வருகிறார்கள், தமிழகத்தில் தேசியம் தேய்பிறையில் உள்ளது. ஆகவே தேச நலனில் அக்கறை கொண்டவர்கள் தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாக பார்க்கின்ற மக்களை கட்சியில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டால், கலைஞருக்கு கோபம் வருவது ஏன் என்று தெரியவில்லை.
கருணாநிதி கலக்கமடைய காரணங்கள் பல இருக்கின்றன. தன்னைப் போலவே பாரதிய ஜனதா கட்சியினருக்கும், அடுத்தவனை ஏமாற்றுதல், எதிர்க் கட்சியை பிளவுபடுத்துதல், கூட இருந்தே குழிபறித்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டால்…? என்ற எண்ணம் ஏற்பட்டதன் விளைவே பொதுக் குழுவில் பேசிய பேச்சு.
பாஜகவை கண்டு மிரளும் கலைஞர், கட்சிகளை உடைத்தும், பிற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை தங்களது கட்சியில் இணைத்தும் சாதனை புரிந்துள்ளார். இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் "இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான், அதை இருப்பவனும் எண்ணி பார்க்க மறந்துட்டான்" என்ற வரி வரும். இந்த வரி எந்த கட்சிக்கு பொருந்துதோ இல்லையோ திமுகவிற்கு நன்கு பொருந்தும். மதிமுக, கம்யூனிஷ்ட், அதிமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் கட்சியில் இணைத்ததும், பழம் பெரும் கம்யூனிஸ சித்தாந்தி மணலி கந்தசாமி மூலமாக காம்ரேடுகளை கலங்க அடித்ததும், சில கட்சிகளை உடைத்ததும் உண்டு. செய்தவர் கலைஞர்.
தமிழகத்தில் கழகங்கள் தங்களது கொள்கை கோட்பாடுகளை எடுத்துக் கூறி வளர்ந்ததாக கருணாநிதி கூறுகிறார். சிரிப்புதான் வருகிறது. காரணம் கொள்கை கோமகன் என பெயர் பெற்ற கருணாநிதியே கொள்கைகள் குடும்பத்திற்காக அடகு வைத்து விட்டார். சுய நலத்திற்காக, தனது குடும்பத்தினரின் நலனுக்காகவே பல நிகழ்ச்சிகளை நடத்தியவர் கருணாநிதி. திராவிட இயக்கத்தின் பொன் விழா, வைர விழா என்றெல்லாம் கொண்டாடாத திராவிட முனேற்ற கழகம், திடீரென விழித்துக் கொண்டு திராவிட இயக்கத்தின் நூற்றாண்டைக் கொண்டாட ஏன் முன்வந்தது என்பதை பார்த்தால் அதன் பின்னணியில் கருணாநிதியின் குள்ளநரித்தனம் தெரியும்.
1963-ல் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டவர்கள், 1963-ல் பிரிவினை தடை சட்டம் கொண்டு வந்தவுடன், தி.மு.க. தங்களது உயிர் மூச்சு கொள்கையான 'அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு' என்ற முழக்கதைப் புதை குழிக்கு தள்ளிவிட்டது. திராவிட நாடு கிடைக்காது என்பது நன்கு தெரிந்தும், குளிர் காய கொண்டு வந்த கொள்கையை. திருவாளர் அன்னாதுரையே இது பற்றி கூறியதை சற்றே பார்க்கலாம். திராவிட நாடு சாத்தியமில்லை என்பதை ஈ. சம்பத் விளக்கும் போது, குறுக்கிட்டு அண்ணாதுரை, "என்ன சம்பத்து நீ டில்லி பார்லிமென்டுக்கு போய், ரஷ்யாவெல்லாம் சுற்றிப் பார்த்த பிறகு இதை சொல்ற, உங்கள் அப்பா (ராமசாமி நாயக்கர்) திராவிட நாடுன்னு சொன்னப்பவே கிடைக்காதுன்னு எனக்கு தெரியும்" என்றார். உடனே சம்பத் "கிடைக்காதுன்னு தெரிஞ்சப் பிறகு அதைச் சொல்லறது மோசடியல்லவா?" என்றார். ஆக இவர்களின் கொள்கை என்பது மோசடி தனமானது, நிறைவேறாததும் என்பதை புரிந்து கொண்டால் கருணாநிதியின் கூற்று பொய் என்பது நன்கு தெரியும். திமுகழகத்தின் நன்மைக்காகவே திராவிட நாடு பிரிவினை கோரிக்கையை கைவிட முடிவு செய்தோம் என்று கூறினார்கள்; நாட்டின் நன்மையை கருதி கைவிடவில்லை! சுயநலத்தின் காரணமாக கொள்கையை கை விட்டவர்கள், தற்போது கொள்கை பற்றி பேசுவது கூத்துதான்.
திராவிட நாடு கொள்கையை போல், மது விளக்கு கொள்கை, தமிழ் மொழி பற்றிய வீர வசனங்கள், இந்தி எதிர்ப்பு, வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற கோஷங்கள். 'ஆட்டுக்கு தாடி நாட்டுக்கு ஆளுநர் தேவையா?" என்ற நையாண்டி வசனங்கள், தேர்தலுக்கு ஆறு மாதங்கள் முன்பே சட்டமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலை சந்திப்போம் என சவால் விட்டது என பழைய ஏடுகளைப் புரட்டினால் திமுகவின் சுயரூபம் சந்தி சிரிக்கும். குப்பனும் சுப்பனும் ஹிந்தி படிக்கக் கூடாது எனப் போராடிய திமுக தலைவர்களின் பிள்ளைகள் மட்டும் ஹிந்தி படிக்க வேண்டும் என கான்வென்ட் பள்ளியில் படித்த வரலாறும் உண்டு.
திமுக தொண்டர்களை மட்டுமே தியாகத்திற்கு பயன்படுத்திக் கொண்டு, பழங்கள் முழுவதும் தனது குடும்பத்திற்கு பகிர்ந்து கொடுப்பது தான் இவர் வாடிக்கை. இதன் காரணமாகவே திமுக தானாகவே மதிப்பிழந்து, பிளவை நோக்கிச் செல்கிறது.
இந்தக் கட்சியை அளிக்க வெளியிலிருந்து யாரும் வர வேண்டிய அவசியம் கிடையாது.
"சமஷ்கிருதத்துக்கு மத்திய அரசு கொடுக்கும் முக்கியத்துவம்,மதமாற்ற நிகழ்வுகள், ஹிந்து மத சாமியார்கள் சிலர் கூறும் கருத்துகள் – ஆகியவற்றுக்கு உரிய முறையில் கழகம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை; பாஜகவை விமர்சிப்பதில் நமக்குத் தயக்கம் உள்ளது என்ற பேச்சு எழுந்துள்ளது என்று திமுக தலைவரிடம் கட்சியின் முக்கியஸ்தர்கள் சில கூறினார்கள். அதன் எதிரொலிதான் கலைஞரின் இப்பேச்சு" என்று ஊடகங்களில் தகவல் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி : ஈரோடு சரவணன்
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.