என் அன்பார்ந்த நாட்டு மக்களே! விவசாயிகளே, வணக்கம்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் மசோதா, உண்மையில் விவசாயிகளுக்கு பலனளிக்கக் கூடியது. நிலம் கையகப்படுத்துதல் மசோதா விவகாரத்தில் எதிர்க் கட்சிகள் பொய்களைப் பரப்பி வருகின்றன , அதன் மூலம் விவசாயிகள் தவறாக வழிகாட்டப்படுகிறார்கள்
"கடந்த 2013-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நிலச்சட்டத்தில் சில குறைபாடுகள் இருந்தன. அந்தச்சட்டம் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது. அதில் இருந்த குறைகளை களைந்து, விவசாயிகள், கிராமங்களின் நலன்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
தற்போதைய நில மசோதாவில் விவசாயிகளுக்கு பயன் தரக் கூடிய எத்தகைய மாற்றத்தையும் சேர்க்க அரசு தயாராகவே உள்ளது. இதை ஏற்கெனவே நாடாளு மன்றத்தில் நான் உறுதிபட தெரிவித்துள்ளேன்.
விவசாயிகளின் காவலனாக மக்கள் முன் வலம் வருவோர் போராட்டங்களை நடத்துகிறார்கள் . 120 ஆண்டு பழமைவாய்ந்த சட்டத்தை சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாக நிலம் கையகப்படுத்த பயன் படுத்தி வந்தனர். இப்போது 2013-ம் ஆண்டு சட்டத்தை மேம்படுத்த முயற்சிக்கும் பாஜக கூட்டணி அரசை இலக்குவைத்து செயல்படுகிறார்கள்.
புதிய மசோதாவில் 2013-ம் ஆண்டு சட்டத்தில் உள்ள அதே இழப்பீடு அம்சங்கள்தான் உள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதாயம் தரக்கூடியவை என்பதெல்லாம் பொய் .
அரசு அல்லது அரசு, தனியார் பங்களிப்புடன் கூடிய திட்டங்களுக்கு அரசு நிலம் கையகப்படுத்தும் போது விவசாயி ஒப்புதல் தேவையில்லை என்கிற பிரிவு புதிய சட்டத்தில் உள்ளது. இதேவிதி முந்தைய சட்டத்திலும் இடம் பெற்றிருந்தது. விவசாயிகள் பலன் பெற வேண்டும்; அவர்களின் வாரிசுகள் நலம் பெற வேண்டும் என்பதற்காக, பல புதிய அம்சங்களையும், விரைவான இழப்பீடுகளையும் சேர்த்துள்ளோம். நிலத்தை வழங்கிய விவசாயிக்கான இழப்பீடு, இப்போதைய மதிப்புபடி வழங்கப்படும். ஆனால், எல்லாவித பொய்களும் புதிய சட்டம் மீது பரப்பப்படுகிறது. விவசாயிகள் தவறாக வழிநடத்தப் படுகிறார்கள்.
2013-ம் ஆண்டு சட்டத்தில் குறைபாடுகள் இருந்தன. அவற்றை களைந்து கிராமங்கள், விவசாயிகள், எதிர்கால சந்ததியினருக்கு நற்பலன்கள் கிடைக்க செய்வதும், அவர்கள் மின் சாரம், குடிநீர் பெற வழிவகுப்பதுமே இந்த அரசின் நோக்கம் . புதிய மசோதாவில் குறை இருப்பதாக யாராவது கருதினால் அதை சரிசெய்ய அரசு தயாராகவே இருக்கிறது.
எதிர்க்கட்சிகள் பரப்பும் பொய்களை விவசாயிகள் நம்பி விடக்கூடாது என்பதே எனது வேண்டுகோள். என்னை நம்புங்கள், உங்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன்.
2013-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது அவசரகதியில் நில மசோதாவை நிறைவேற்றியது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக, விவசாயிகள் நலன் கருதி ஆதரித்தது. அவசரத்தில் செய்யும் எதிலும் குறைகள் இருக்கத்தான் செய்யும். முந்தைய அரசு மீது நான் குறை கூறவில்லை. விவசாயிகள், அவர்களது குழந்தைகளுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். எனவே, சட்டத்தில் குறைகள் இருந்தால் அதை சரிசெய்வோம். இதுதான் எங்கள் முன்னுரிமை.
இதற்கு முன், மகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசுகள், நிலங்களை கையகப்படுத்தியதற்கு வழங்கிய இழப்பீடு, எங்களின் புதிய மசோதாவில் வழங்கப்பட நாங்கள் நிர்ணயித்துள்ள இழப்பீடை விட, பாதிக்கு பாதி குறைவு. மேலும், சில மாநிலங்களில் சிறப்பான நிலம் கையகப்படுத்தும் சட்டம் அமலில் உள்ளது என்றால் , அந்த மாநிலங்கள் தங்கள் இஷ்டத்திற்கு அந்த சட்டத்தை பின்பற்றி கொள்ளலாம் . எந்த மாநிலமாவது முந்தைய சட்டத்தையே ஏற்கத் தயார் என்றால் அப்படியே செய்யட்டும். அது அவர்கள் விருப்பம்.
ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை, சுரங்கம் போன்ற அரசின் செயல்பாடுகளுக்கு அதிக நிலம் தேவைப்படுகிறது. அரசின் இதுபோன்ற 13 அம்சங்கள் 2013 சட்டத்தில் இடம்பெறாமல் போனது. எனவே, இத்தகைய பிரிவுகளுக்கு நிலம் கையகப்படுத்தும் போது 120 ஆண்டு பழமை வாய்ந்த சட்டத்தின் படிதான் விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கும். இது மிகப் பெரிய குறைபாடு ஆகும். புதிய சட்டத்தின்படி இதை சரிசெய்து இந்த 13 பிரிவுகளுக்கு கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு 4 மடங்கு இழப்பீடு கிடைக்க வகை செய்யப் பட்டுள்ளது. இவை விடுபட்டிருந்தால் அதிகாரிகளுக்குத் தான் ஆதாயம்.
மேலும், நிலம்வழங்கும் விவசாயி குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கிடைக்கும். முக்கிய திட்டங்களுக்கு நிலம் தேவை என்றால் முதலில் அரசு நிலங்களே பயன்படுத்திக் கொள்ளப்படும். அதற்குப் பின், பயன் பாட்டில் இல்லாத வறண்ட நிலங்கள் கையகப்படுத்தப்படும். அதற்கு பின், தேவைப்பட்டால் தான், விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும். விவசாயிகளிடம் இருந்து உடனடியாக நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என்பதற்காகத் தான், வறண்ட நிலங்களை கணக்கெடுக்க சொல்லி உள்ளோம். இப்போதைக்கு எங்கள் முன்னுரிமை, வறண்ட நிலங்கள் தான்.நிலத்தை அளித்த விவசாயிக்கு ஏதாவது கஷ்டங்கள், மனக்குறை இருந்தால் அதை தீர்க்க, தாலுகா அளவிலேயே நீதிமன்றங்களை நாடி, நிவாரணம் பெறலாம்.நிலம் கையகப்படுத்தியதில் இருந்து எத்தனை நாட்களுக்குள் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இழப்பீடு தொகையை குறைப்பதற்காக புதிய சட்டம் கொண்டு வருவதாக என் மீது பொய் பரப்புகிறார்கள் . அந்த பாவத்தை நான் செய்ய மாட்டேன். நான் விவசாயிகளுக்கு எதிரி அல்ல. விவசாயிகள் எப்போதும் வறியவர்களாகவே இருக்கவேண்டும். நாடு வளம் பெறக் கூடாது என சதி நடக்கிறது. இதில் நாம் கவனமாக இருக்கவேண்டும். இந்த மசோதா கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானதல்ல,
விவசாயிகளையும், நாட்டையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. தொழில் மயமானால், கிராமங்கள் செழிப்படையும், நல்ல தரமான சாலைகள், நீர் பாசன திட்டங்கள் போன்ற வசதிகள் கிடைக்கும். இவற்றை செய்ய, அரசிடம் நிதி இல்லை. அதனால் தான், தனியார் மற்றும் பொதுத்துறை இணைந்து, திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.
மனதின் குரல்' (மன் கி பாத்) நிகழ்ச்சியின் 6-வது தொடரில் விவசாயிகளுக்காக பிரதமர் மோடி வானொலியில் உரையாடியது
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.