கர்நாடகத்தில் மீண்டும் பாஜக ஆட்சிமலரும் என பாஜக தேசிய துணைத் தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பெங்களூருவில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, பாஜக தேசியத் தலைவராக அமித்ஷா பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நடத்தப்படும் தேசிய நிர்வாகிகள்,செயற்குழு கூட்டத்தை பெங்களூருவில் நடத்த ஒப்புக்கொண்டதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். 1967-இல் கர்நாடகத்தின் ஹுப்பள்ளியில் ஜன சங்கத்தின் தேசிய செயற்குழு கூட்டம் நடந்துள்ளது. பாஜகவாக மாறியபிறகு, 1993,1998, 2008 ஆகிய ஆண்டுகளில் தேசிய செயற்குழு கூட்டம் பெங்களூருவில் நடந்துள்ளது. இதை தொடர்ந்து தற்போது மீண்டும் தேசியசெயற்குழு பெங்களூருவில் கூடவிருக்கிறது.
கர்நாடகத்தில் நடந்து வரும் ஆட்சி மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதால், ஆட்சிமாற்றத்திற்காக காத்திருக்கிறார்கள். எனவே, கர்நாடகத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைப்பதற்கான செயல்திட்டம் செயற்குழுவில் வகுக்கப்படும். கர்நாடகத்தை மையமாக வைத்துக்கொண்டு தென்னிந்தியாவில் பாஜகவை பலப்படுத்தி ஆட்சி அமைப்பதே தேசிய செயற்குழுவின் முக்கிய நோக்கமாகும். தேசிய செயற்குழுவை நாட்டுமக்கள் ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறார்கள்.தேசிய அளவில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான முக்கிய முடிவுகளும் செயற்க் குழுவில் எடுக்கப்படும். நாட்டின் வளமான எதிர் காலத்திற்கு தேவையான விஷயங்கள் குறித்து செயற்குழு நல்ல முடிவெடுக்கும். கர்நாடகத்தில் பாஜக ஆட்சியை கொண்டு வருவதற்கான வியூகங்களும் அமைக்கப்படும் என்றார்.
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.