விவசாயிகளுக்கு அதிகாரம் கிடைக்கச்செய்ய வேண்டும்

 நிலக்கரியை வைரமாக்கியும், ஸ்பெக்ட்ரம் மூலமும் லட்சக் கணக்கான கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளோம். இதன் மூலம் நாடு முன்னேற்றப் பாதையில் செல்கிறது .

கடந்த, 30 ஆண்டுகளுக்கு பின் நாடுமுன்னேற்ற பாதையில் அடியெடுத்துள்ளது. காங்கிரஸ்., ஆட்சியின் போது முன்னேற்றமில்லாமல், நாடு பின்னடைவை அடைந்தது. தற்போது மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில், அரசு செயல்பட்டு வருகிறது.குறிக்கோள் நன்றாக இருந்தால்தான், முடிவுகள் நல்ல முறையில் அமையும். எதிர்க்கட்சிகளுக்கு நல்லகுறிக்கோள் இல்லை. திட்டங்களை விரைந்து முடிப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளோம். பட்ஜெட் கூட்டத்தொடரில், கறுப்பு பணத்தை ஒழிப்பது குறித்து அருண்ஜெட்லி விளக்கியுள்ளார். இதற்காக புதியதிட்டத்தை உருவாக்கியுள்ளார். கறுப்பு பண விவகாரத்தை, உலக நாடுகளின் மத்தியில் விவாதத்திற்கு எடுத்து வைத்துள்ளோம். இதை எதிர்க் கட்சிகள் உணர்ந்து மவுனமாகி உள்ளன.வார்த்தையைவிட செயலில்தான் அதிக முக்கியத்துவம் காட்டி வருகிறோம். விவசாயிகளின் மனவேதனை எனக்கு தெரியும். அவர்களின் கஷ்டத்தை உணர்ந்தவன். இதற்காகவே நிலமசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

விவசாய நிலத்தை வழங்கி, தன் சந்ததியினருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து, நாட்டின் வளர்ச்சிக்கு உதவலாமே.இந்தியா பின்தங்கிய நாடு என்று சொல்வதற்கு எந்தகாரணமும் கிடையாது. வரும் ஆண்டுகளில் இந்தியா மேலும் முன்னேற்ற மடையும். மத்திய, மாநில அரசு கூட்டமைப்பு முறையில் இயங்க வேண்டுமென்று விரும்பி செயல் படுத்தியுள்ளோம். கர்நாடகா வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது. மொபைல் கவர்னன்ஸ் மூலம் இந்தியா முன்னேற்ற பாதையில் செல்கிறது. இந்திய பொருட்களை பயன் படுத்தி, 'மேக் இன் இந்தியா' திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.மொத்தம், 204 நிலக்கரி சுரங்கங்களில், 20 சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டதில், 2 லட்சம்கோடி வருவாய் கிடைத்துள்ளது. நிலக்கரியை வைரமாக்கியுள்ளோம். இதேபோன்று, ஸ்பெக்ட்ரம் மூலம், ஒருலட்சம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது. ரயில்வே பட்ஜெட் தொலை நோக்கு பார்வையுடன் சமர்பிக்கப்பட்டுள்ளது.ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு அப்பாற்பட்டு, கர்நாடகா அபிவிருத்தியடைய வேண்டும். வரும் ஐந்தாண்டுகளுக்கு, கர்நாடகாவிற்கு, ஒருலட்சத்து, 83 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இது கடந்த காலங்களைவிட, 200 சதவீதம் அதிகம்.

நான் ஏழை குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தவன். விவசாயிகளின் வலி எனக்குதெரியும். பா.ஜ., அரசு, ஒருபோதும் விவசாயிகளுக்கு எதிராக செயல் படாது.காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக விவசாயிகள் பற்றி பேசுகின்றனர். ஆனால், விவசாயிகளின் நலனை பாதுகாப்பதுதான் பா.ஜ.க,வின் நோக்கம்.காங்கிரஸ் ., ஆட்சியில் விவசாய நிலங்கள் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்பட்டன. ஆனால், பா.ஜ., அரசு இந்த விஷயத்தில் விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் செயல்படும்.நில ஆவணங்கள் விவசாயிகளுக்கு பயன் தரும் வகையில் மாற்றப்படவுள்ளன. இதன் மூலம், விவசாயிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் அவர்களுக்கு மீண்டும்கிடைக்கும்.

கிராமங்கள் வளர்ச்சி அடையாமல், நாடு வளர்ச்சியடையாது. விவசாயிகளுக்கு அதிகாரம் கிடைக்கச்செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.இதற்கு முந்தைய , ஆட்சி காலத்தில் நாட்டின் நிர்வாகம் சீர்குலைந்திருந்தது. கடந்த, 10 மாதங்களில் அதை சீர்படுத்தியுள்ளோம். வளர்ச்சியில், நம் நாடு பின்தங்கியிருப்பதை இனியும் அனுமதிக்க மாட்டோம்.நாட்டில் இரண்டாவது பசுமைப்புரட்சியை ஏற்படுத்துவோம். எங்களுக்கு ஓட்டளித்த மக்களின் நம்பிக்கையையும், விருப்பத்தையும் நிறைவேற்றுவோம். அதில் எந்த சமரசமும் செய்யமாட்டோம்.

வெளிநாடுகளில் இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்போம். எதிர்காலத்தில் கறுப்புப் பணம் பதுக்கலை முழுமையாகத் தடுப்போம்.நாட்டின் வளர்ச்சியில் மாநிலங்களுக்கும் முக்கிய பங்குண்டு. மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான உறவை பலப்படுத்துவதற்காகவே, நிடி – அயோக் அமைக்கப் பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு சம உரிமை அளிக்கப்படும்.கடந்த ஆட்சியில் எங்கு பார்த்தாலும் ஊழல் மயமாக இருந்தது. இதனால், உலகநாடுகள் மத்தியில் நம் நாட்டின் பெருமைக்கு பாதிப்பு ஏற்பட்டது.நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், அந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். புதிய நம்பிக்கையையும், எதிர் பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளோம்.

பசவனகுடி நேஷனல் கல்லுாரி மைதானத்தில், கட்சி பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேசியது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...