நாட்டின் வளர்ச்சிக்கு தோள்களில் கலப்பையை ஏந்துங்கள் துப்பாக்கியை ஏந்தாதீர்கள். துப்பாக்கி கலாச் சாரத்தால் மாவோயிஸ்ட்கள் நடத்தும் நாடகம் முடிவுக்குவரும். எதிர் காலத்தில் வன்முறைக்கு இடமில்லை. எதிர் காலம் அமைதியாக இருக்கப் போகிறது.
நக்சல் இயக்கத்தின் பிறப்பிடமான நக்சல் பாரியிலேகூட இப்போது அந்த இயக்கம் செயல்பாட்டில் இல்லை. கொடூர கொலைகளை அரங் கேற்றும் மாவோயிஸ்ட்களின் நாடகம் விரைவில் முடிவுக்குவரும்.
உங்கள் ஆயுதங்களை தூக்கி எரிந்து விட்டு உங்களால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தாரை சென்றுபாருங்கள். உங்கள் மனம் மாற்றம் அடையும். அந்த சுயபரிசோதனை நீங்கள் ஆயுதத்தை கைவிட வழிவகுக்கும்" இவ்வாறு சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் இரண்டு முக்கிய வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
ரூ.24,000 கோடி செலவில் இரண்டு திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார். ஒன்று தண்டேவாடா மாவட்டத்தின் தில்மிலி கிராமத்தில் அமைக்கப் பட்டுள்ள இரும்பு ஆலை. மற்றொன்று ராவ்காட் – ஜக்டால்பூர் இடையேயான ரயில்பாதை.
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.