அமேதியில் திட்டமிடப் பட்டிருந்த உணவுப் பூங்கா திட்டத்தை ரத்துசெய்ய கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் போது வெளியிடப்பட்ட கடிதத்தை மத்திய அரசு நேற்றுவெளியிட்டது.
அமேதியில் சக்திமான் மெகா உணவுப்பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. இந்ததிட்டத்தை செயல்படுத்த முன்வந்த நிறுவனம் சில கோரிக்கைகளை முன்வைத்தது. ஆனால் அதற்கு மத்தியஅரசு அனுமதி மறுத்தது. அதையடுத்து திட்டத்தை செயல் படுத்த முடியாது என்று அந்தநிறுவனம் பின்வாங்கியது. அதைத்தொடர்ந்து இந்த திட்டத்துக்கு அந்த நிறுவனத்துக்கு அளித்திருந்த அனுமதியை மத்திய அரசு ரத்துசெய்தது.
தன்னுடைய தொகுதி என்பதால் மோடி தலைமை யிலான மத்திய அரசு இந்ததிட்டத்தை ரத்துசெய்தது என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக நாடாளு மன்றத்திலும் அவர் பிரச்னை எழுப்பினார். தொடர்ந்து அரசுக்கு எதிராக அவர் குரல்கொடுத்து வந்தார். இந்ததிட்டத்தை செயல்படுத்துவதற்கு இயற்கை எரிவாயு மூலம் மின்சாரம் பெறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதற்கான இயற்கை எரிவாயுவை குறைந்த பட்ச விலையில் அளிக்கவேண்டும் என்று அந்த நிறுவனம் கோரியது.
ஆனால், அவ்வாறு அளிக்கமுடியாது என்று கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மத்திய பெட்ரோலிய துறை தெரிவித்தது என்று மத்திய உணவு பதப்படுத்துதல்துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்தார். கடந்த ஐமு. கூட்டணி ஆட்சியின் போது பெட்ரோலியத் துறை அமைச்சகம் இதுதொடர்பாக வெளியிட்ட கடிதத்தை தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
"இந்த திட்டம் அமேதியில் எங்கு அமைக்க திட்டமிடப் பட்டது என்பது கூட ராகுல் காந்திக்குதெரியாது. கடந்த ஆட்சியின்போது பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்த கருத்தின் அடிப்படையில், கடந்த ஆண்டு ஜூன் மாதமே இத்திட்டம் ரத்துசெய்யப்பட்டது. ஆனால் 10 மாதங்களாகியும் இது தெரியாமல் இருந்துள்ளார் ராகுல் காந்தி. அவர்களுடைய ஆட்சியின் போதே ஏன் இந்த திட்டத்துக்கு அவர் அனுமதியை பெற்றுத் தரவில்லை" என்று ஹர்சிம்ரத் கேள்வி எழுப்பியுள்ளார்.
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.