நகரங்களில் காடுகளை வளர்க்கும் 'urban forest' எனும் திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:-
முனிசிபல் கார்ப்பரேஷன்களுக்கு சொந்தமான 200க்கும் மேற்பட்ட நகரங்கள் நாடுமுழுவதும் உள்ளன. அவைகளில் வனத் துறைக்கு ஏற்ற இடங்களாக பல இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அதுமாதிரியான இடங்களில் மரங்களின் அடர்த்தி மிகக் குறைவாக உள்ளன. சில இடங்களில் மரங்களே காணப்படுவது இல்லை. எனவே நாங்கள் முனிசிபல் கார்ப்பரே ஷன்களின் உதவியோடும், மாநில அரசுகளின் உதவியோடும் அந்த இடங்களில் மரங்களை நடுவதற்கு முடிவுசெய்துள்ளோம்.
இன்றைக்கு நகரங்களில் நிறைய தோட்டங்கள் இருக்கின்றன. ஆனால், காடுகள் இல்லை. மும்பையிலாவது சஞ்சய்காந்தி தேசிய பூங்கா உள்ளது. ஆனால், பலநகரங்களில் இதுவும் கிடையாது. மாங்குரோவ் காடுகள் கடலோரபரப்பின் இயற்கையான பகுதி. அதனால் தான், நகர மேம்பாட்டிற்கான பணிகளை மேற்கொள்ளும் போது மாநில அரசுகள் ஒருமுறைக்கு இருமுறை அவைகளின் பாதிப்புகுறித்து அறிக்கை கேட்கின்றன. ஏற்கனவே, 500 ஹெக்டேர் அளவுக்கு மாங்குரோவ் பூங்காக்களை உருவாக்க மராட்டிய முதல்வரை கேட்டு கொண்டுள்ளேன்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளிகளில் மாணவர்கள் மரக் கன்றுகளை நடுவதை ஊக்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட மத்திய அரசு தயாராக உள்ளது. ஒருபள்ளியில் 5,6,7 என 3 வகுப்புகளிலும் 500 மாணவர்கள் படிக்கிறார்கள் என வைத்து கொள்வோம். ஆளுக்கு ஒருமரக்கன்றை நட்டாலும்கூட 500 மரக்கன்றுகள் நடப்பட்டுவிடும். இந்த மரக் கன்றுகளுக்கு விதைகளை நட்டது முதல் ஒரு ஆண்டுவரை பராமரிப்பது அந்த மாணவர்களின் கடமையாகும். இதன்மூலம் பள்ளி மாணவர்களுக்கு இயற்கையை பற்றிய கல்வியை வழங்கமுடியும் இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.