வியாபம் ஊழல்தொடர்பாக சிவராஜ்சிங் சவுகான் பதவிவிலக தேவையில்லை என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் கோடிக் கணக்கான ரூபாய் அளவுக்கு நடந்துள்ள வியாபம் (மத்தியபிரதேச தொழில்முறை தேர்வு வாரியம்) ஊழல்தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட பலர் அவ்வப்போது மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளனர்.
இது வரை 48 பேர் மரணம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஊழல் மற்றும் மர்மமரணங்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐ க்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் பதவி விலகவேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், வியாபம் ஊழல்தொடர்பாக சிவராஜ் சிங் சவுகான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மனோகர் பாரிக்கர், "சுதந்திரமான மற்றும் உண்மையான விசாரணை நடத்தப்படவேண்டும் என்று வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் மத்திய பிரதேச அரசு ஏற்று கொண்டுள்ளது.
எனவே சிவராஜ்சிங் சவுகான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டிய அவசியம் இல்லை" என்று கூறியுள்ளார்.
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.