:''இந்தியா, உலகுக்கு வாரி வழங்கியது ஆன்மிகம்; மதவாதம் அல்ல,'' பண்டைய காலத்தில், நம் நாட்டின் துறவிகளும்,முனி வர்களும், உலகுக்கு வாரி வழங்கியது, ஆன்மிகத்தை; மதவாதத்தை அல்ல. இனப்பிரிவுகள், சிலசமயம் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். மாறாக ஆன்மிகம், அப்பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும்.
இந்தியா, ஒருகுறிப்பிட்ட இன அல்லது மத மக்களின் நாடு என்ற அடையாளத்துடன் உலகோடு இணைவதற்கு முயல வில்லை. ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, மதவாதத்தையோ இந்தியா உலகுக்கு அளிக்க வில்லை. ஆனால், இந்தியமக்களை உலகம் சரியான முறையில் புரிந்து கொள்ளாதது வருத்தமளிக்கிறது.
இந்தியாவில் இது வரை வாழ்ந்த முனிவர்களும், ரிஷிகளும் ஆன்மிகத்தை மட்டுமே உலகுக்கு அளித்தனர். சிலநேரங்களில் மதவாதம் என்பது, பிரச்னைகளை உருவாக்கும் மூல காரணியாக உள்ளது. ஆனால், ஆன்மிகம், பிரச்னைகளுக்குத் தீர்வுகளை தருகிறது .
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், இந்தியாவின் ஆன்மிக தன்மையில், நம்பிக்கை உள்ளவர். 'மனித இனத்தை, ஆன்மிகப்படுத்துவதால், மனிதர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்' என, அப்துல் கலாம் கூறினார். எல்லா மதங்களையும் விட, தேசிய மதமே சிறந்தது. இந்தியாவின் பாரம்பரியம், உலகில் சிறப்புத் தன்மை வாய்ந்தது.
மும்பையில் நேற்று நடந்த, ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், 'வீடியோ கான்பரன்சிங்' முறையில், பிரதமர் நரேந்திர மோடி பேசியது.
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.