நாடாளுமன்றத்தில் அண்மையில் தாக்கல்செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் கிராமப்புற வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசைப்பாராட்டி, பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாஜக தேசிய செயற் குழுவின் 2 நாள் கூட்டம், தில்லியில் சனிக் கிழமை தொடங்கியது. இதில், மத்திய பட்ஜெட்டில், கிராமப்புற வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசைப்பாராட்டி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதலில் சோஷலிஸ பொருளாதார கொள்கையை தீவிரமாக பின்பற்றிய முந்தைய காங்கிரஸ் அரசுகள், பின்னர் அதற்குநேர்மாறாக முதலாளித்துவ பொருளாதார கொள்கையை பின்பற்றியதை கண்டித்தும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து மத்திய அமைச்சர் அனந்த்குமார், பாஜக பொதுச்செயலர் பூபேந்தர் யாதவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியபோது, "கிராமப்புற ஏழைகள், விவசாயிகளுக்கு மத்தியபட்ஜெட் அர்ப்பணிக்கப் பட்டுள்ளது. விவசாயம் மற்றும் அதைச்சார்ந்த துறைகளுக்கு கடன்வழங்க, பட்ஜெட்டில் ரூ.9 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது' என்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.