யோகாசெய்தால் புற்று நோய் போன்ற நோய்கள் குணமாகும் என்பது ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப் பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்தார்.
கோவாவில் தேசிய மருத்துவ கண்காட்சி சனிக் கிழமை தொடங்கியது. இதில் மத்திய ஆயுஷ் மருத்துவத்துறை அமைச்சர் ஸ்ரீபத்நாயக் கலந்து கொண்டு பேசியதாவது: ஆயுர் வேதம், யோகா, நேச்சுரோபதி, யுனானி, சித்தா ஆகியவற்றை உள்ளடக்கிய ஆயுஷ் மருத்துவத்தை மாற்று மருத்துவ சிகிச்சையாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும். ஆயுஷ் மருத்துவம் என்பது அலோபதிக்கு எதிரானதல்ல.
நோயாளிகளை குணப்படுத்துவதே அனைத்து மருத்துவசிகிச்சை முறைகளின் நோக்கமாக இருக்க வேண்டும். புற்றுநோய், நீரிழிவு, உடல் பருமன் போன்ற குறைபாடுகளை குணப்படுத்த வேண்டுமெனில் மருந்துகளை ஒருங்கிணைத்து பயன்படுத்த வேண்டும். ஆயுஷ் மருத்துவ சிகிச்சை முறைகளைப் பயன்படுத்தி புற்று நோயை குணப்படுத்துவது தொடர்பாக ஆராய்ச்சிசெய்வது குறித்து அமெரிக்காவுடன் விரைவில் ஒப்பந்தம் செய்யவுள்ளோம். யோகா மூலம் புற்று நோயை குணப்படுத்தலாம் என்று பெங்களூரில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று தனது ஆய்வுமுடிவில் நிரூபித்துள்ளது.
ஆயுஷ் மருத்துவ சிகிச்சை முறையின் சிறப்புகளை விளக்குவது தொடர்பாக மத்திய அரசுடன் இணைந்துசெயல்பட உலக சுகாதார அமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளது. தில்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளதுபோல், அனைத்து மாநிலங்களிலும் ஆயுஷ் மருத்துவ சிகிச்சைக்கான எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் ஸ்ரீபாத் நாயக்.
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.