மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜியின் குற்றச் சாட்டுக்களுக்கு பதில் சொல்லும்வகையில், தேர்தல் ஆணையம் தன்னாட்சி அதிகாரம்கொண்டது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக மம்தாபானர்ஜி மீது புகார் கூறப்பட்டு அவருக்கு ஆணையம் நோட்டீசும் அனுப்பியும் உள்ளது தேர்தல் ஆணையம். மாநிலத்தின் முதல்வர் என்கிற முறையில் தாம் எந்த நடத்தைவிதிகளையும் மீறவில்லை என்று கூறியுள்ள மம்தா, முதல்வர் என்றும் பாராமல் தம்மீது தேர்தல் ஆணையம் புகார் கூறிஉள்ளது என்று கூறியுள்ளார். அதோடு, நோட்டீஸ் அனுப்பியும் தம்மை அவமதித்து உள்ளது தேர்தல் ஆணையம் என்றும் மம்தா புகார் கூறியுள்ளார்.
மேற்குவங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள மோடி இதுக்குறித்துக் கூறுகையில்,. மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் உள்ளதால், திரிணமுல் காங்கிரஸ் தலைவர் என்கிற முறையில்தான் தேர்தல்
ஆணையம் மம்தா பானர்ஜிக்கு நோட்டீஸ் அனுப்பிஉள்ளது என்றும், முதல்வர் என்கிற முறையில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பபபடவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். அதோடு தேர்தல்ஆணையம் தன்னாட்சி அதிகாரம்கொண்டது
என்றும், யாரும் ஆட்சிக்குவரலாம், வராமல் போகலாம், அவர்களுக்கான அதிகாரம் நிரந்தரமல்ல என்றாலும், தேர்தல் ஆணையம் அப்படியே நிலைத்து இருக்கும், அதற்கு தன்னாட்சி அதிகாரம் உண்டு என்றும் விளக்கம்
அளித்துள்ளார். இந்திரா காந்தி நடத்தை விதி முறைகளை மீறியதால், 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாமல் இருந்ததையும் மோடி நினைவு கூர்ந்துள்ளார்
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.