இந்தியா தற்போது முதலீட்டாளர்களுக்கு சிறந்தவாய்ப்புள்ள தேசமாக விளங்குகிறது

இந்தியா தற்போது முதலீட்டாளர்களுக்கு சிறந்தவாய்ப்புள்ள தேசமாக விளங்குகிறது. எனவே இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் என்று கத்தார் தொழில திபர்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். இந்தியாவில் முதலீடுசெய்வதில் உள்ள சிக்கல்களை அடையாளம் காட்டினால் அதை களைவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

இருநாடுகளிடையே மொத்தம் 7 ஒப்பந்தங்கள் கையெழு த்தாயின. இதில் முக்கியமானது நிதி புலனாய்வு. இந்த ஒப்பந்தம்மூலம் அந்நியச்செலாவணி மோசடி மற்றும் தீவிரவாதிகளுக்கு பணம் பரிவர்த்தனை யாவதைத் தடுக்க முடியும். கட்டமைப்பு துறையில் முதலீடுசெய்வதற்கான ஒப்பந்தமும் இதில் முக்கியமானதாகும். திறன்மேம்பாடு, கல்வி, சுகாதாரம், சுற்றுலா, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

முன்னதாக கத்தார் தொழிலதிபர் களுடனான வட்டமேசை சந்திப்பில் பேசிய மோடி, இந்தியாவில் முதலீடு செய்வதற்கு உங்களை தனிப்பட்டமுறையில் அழைப்பதற் காகத்தான் இங்கு வந்துள்ளேன் என்றார். வேளாண் பதனீடு, ரயில்வே, சூரியமின்சக்தி உள்ளிட்ட துறைகளில் வளமான வாய்ப்புகள் உள்ளன என்று குறிப்பிட்டார்.

இந்தியாவில் வளமான வாய்ப்புள்ளது என்பதை அங்கீகரிக் கிறீர்கள். இருப்பினும் முதலீடு செய்யத் தயங்குகிறீர்கள். முதலீடுசெய்வதில் உள்ள சிக்கல்களை எடுத்துக் கூறினால் அதை நீக்க தயாராகஇருப்பதாக அவர் கூறினார்.

இந்தியாவில் 80 கோடி இளைஞர்கள் உள்ளது மிகப்பெரிய பலமாகும். கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவது மற்றும் மேம்படுத்துவது, உற்பத்தித்துறையை முடுக்கி விடுவது ஆகியன தம்முன் உள்ள முக்கிய முன்னுரிமைப் பணிகள் என்று மோடி குறிப்பிட்டார்.

ஸ்மார்ட்சிட்டி, மெட்ரோ, நகர்ப்புற கழிவு மேலாண்மை ஆகியன மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் என்று குறிப்பிட்டவர், இரு நாடுகளிடையிலான வர்த்தக உறவுமேம்பட கத்தார் அமீர்ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானி மிக முக்கிய பங்காற்றி வருவதாக கூறினார். இருநாடுகளிடையிலான வர்த்தகம் 1,000 கோடி டாலராகும். இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...