ஜல்லிக்கட்டு தடையை நீக்க இன்று அல்லது நாளைக்குள் அவசர ஆணை

ஜல்லிக்கட்டுக்கு இருக்கும் தடையை நீக்க இன்று அல்லது நாளைக்குள் அவசரஆணை பிறப்பிக்கப்படும் என்று இந்திய சுற்றுச் சுழல் அமைச்சர் அனில் மாதவ்தவே உறுதியளித்துள்ளார்.

இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்த அனில் மாதவ்தவே இதனை தெரிவித்தார்.

2011 ஆம் ஆண்டு மாடு காட்சிப் படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால் தான் இத்தகைய நிலை ஏற்பட்டு விட்டது என்றும், தமிழ்நாட்டு மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்திவருவதால், ஜல்லிக்கட்டை அனுமதிப்பதற்கு ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் செய்தி யாளர்களிடம் கூறினார்.

அவசர ஆணையை வெளியிடுவதற்கான தமிழகஅரசின் மனுவை பரிசீலனை செய்து, மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுக்கும் என்று அனில் மாதவ்தவே தெரிவித்துள்ளார்.

மேலும், செய்தியாளர்களிடம் இது குறித்துபேசிய மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முழுஆதரவு வழங்கும் என்றும், இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் உள்துறை அமைச்சரை சந்தித்து கடிதம் ஒன்றை வழங்கி யிருக்கிறார் என்றும் கூறினார்.

அந்த கடிதம் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கிடைத்தவுடன் இன்று அல்லது நாளைக்குள் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நல்லமுடிவு கிடைக்கும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் என்கவுன்டர்களை கு ...

தமிழகத்தில் என்கவுன்டர்களை குறைக்க வேண்டும் L. முருகன் கருத்து 'தமிழகத்தில் என்கவுன்டர்களை குறைக்க வேண்டும். துப்பாக்கியை வைத்து சட்டம் ...

பென் நெவிஸ் சிகரம் ஏறி பா.ஜ.க தலை ...

பென் நெவிஸ் சிகரம் ஏறி பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சாதனை ஸ்காட்லாந்தில் பென் நெவிஸ் சிகரம் மீதேறி பா.ஜ., மாநில ...

ஒரே பதவி ஒரே பென்சன் திட்டம் கு ...

ஒரே பதவி ஒரே பென்சன் திட்டம் குறித்து ராணுவ வீரர்களிடம் காங்கிரஸ் பொய் கூறுகிறது பிரதமர் மோடி பேச்சு '' ஒரே பதவி, ஒரே பென்சன் திட்டம் குறித்து ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களி ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களின் சக்தி மண்டோலியா பெருமிதம் கடந்த 7 ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை இருமடங்கு ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அர ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை, புரோக்கர்களும், வாரிசுகளும் ஆட்டிப்படைத்தனர் -அமித் ஷா 'காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை,புரோக்கர்களும்,வாரிசுகளும் தான் ஆட்டிப்படைத்தனர்,' என ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த்தம் மாறிவிட்டது நிதின் கட்கரி கருத்து  ''ஒரு காலத்தில் அரசியல் என்றால், மக்கள் சேவை, நாட்டை ...

மருத்துவ செய்திகள்

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...