நாட்டில் முறையாக வருமானவரி கட்டுபவர்கள் என்றால், அது நடுத்தர வர்க்கத்தைச்சேர்ந்த அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் தான். பல்வேறு துறைகளில் பல லட்சங்கள் சம்பாதிப்பவர்களும், ெபரும் கோடீஸ்வரர்களில் பலர் வரி ஏய்ப்புதான் செய்கின்றனர். கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் 2 கோடி பேர் வெளிநாடுகளுக்கு போய் வந்திருக்கிறார்கள். 1.25 கோடிக்கும் அதிகமாக கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. ஆனால், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மேல் கணக்கு காட்டியிருப்பது வெறும் 76 லட்சம் பேர்தான்
2015-16ம் நிதியாண்டில் தனிநபர்கள் 3.7 கோடி பேர் வருமானவரி செலுத்தியுள்ளனர். அவர்களில் 99 லட்சம்பேர் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் மட்டுமே வருமானம் ஈட்டுவதாக தெரிவித்துள்ளனர். 1.95 கோடி பேர், ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். சுமார் 52 லட்சம் பேர், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும் வருமானம் பெறுவதாகவும், 24 லட்சம்பேர், ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டுவதாகவும் தெரிவித்திருக்கின்றனர். ஆகமொத்தத்தில், நாடுமுழுவதும் வெறும் 76 லட்சம் பேர் மட்டுமே தங்களது ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் அதிகம் என்று கணக்கு காட்டியிருக்கிறார்கள். 2 கோடிபேர் வெளிநாடு பயணம் மேற்கொண்ட நிலையில், இது முரண்பாடாக உள்ளது. அதே போல், ரூ.50 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் பெறுவதாக 1.72 லட்சம் பேர் மட்டுமே தெரிவித்துள்ளனர்.
ரூ.500, ரூ.1000 செல்லாது என நவம்பர் 8ம் தேதி அறிவித்தபின்பு, டிசம்பர் 30ம் தேதி வரையிலான நாள்களில் வங்கிகளில் 1.09 கோடி கணக்குகளில் ரூ.2 லட்சம்முதல் ரூ.80 லட்சம் வரையில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கின்றன. ரூ.80 லட்சத்துக்கும் அதிகமாக 1.48 லட்சம் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கின்றன.
நன்றி அருண்ஜெட்லி
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
Leave a Reply
You must be logged in to post a comment.