அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி; இந்தியதலைவர்கள் அங்கு சுதந்திரமாக சென்றுவர முடியும்' என சீனாவுக்கு இந்தியா பதிலடி தந்துள்ளது.
ராணுவ அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, நிர்மலா சீதாராமன், அருணாச்சல பிரதேசத்தில், அஞ்ஜாமாவட்டத்தில், சீனாவை ஒட்டிய எல்லைப்பகுதிக்கு சென்று, அங்கு நிறுத்தப்பட்டுள்ள வீரர்களை சந்தித்து கலந்துரை யாடினார். இதற்கு, சீனா எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில், மத்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்ததாவது: அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இந்திய தலைவர்கள் அங்கு சுதந்திரமாக சென்றுவர முடியும். இரு தரப்பினரும் தொடர்பில்தான் உள்ளோம். இருதரப்பு எல்லை குறித்த அடுத்தகட்ட பேச்சு வார்த்தைக்கான தேதிகள் விரைவில் தெரியவரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.