ராகுல் காந்தியை எனக்கு விமர்சிக்க தகுதிகள் உள்ளதா என்று கேட்ட தமிழககாங்கிரஸ் தலைவர் அண்ணன் கே.ஸ்.அழகிரி அவர்களுக்கு தமிழக பா.ஜ.க தலைவர்டாக்டர். தமிழிசை சௌந்திரராஜன் அவர்களுக்கு என் பதில்.
நேரு குடும்ப வாரிசு என்ற ஒரே தகுதியை கொண்டதால் ராகுல் காந்திக்கு காங்கிரஸ்தலைவர் பதவி வழங்கப்பட்டது. யாரிடமும் சிபாரிசு கோராமல் அரசியலைசுய புத்தியுடன் பகுத்தாய்ந்து பாதை வகுத்து சொந்தக்காலில் நின்று அடிமட்டதொண்டராய் உழைப்பால் தலைவராக படிப்படியாக உயர்ந்த எனக்கு இந்திய குடிமகள்தமிழ்நாட்டு பிரஜை என்ற முறையில் எனக்கு எல்லாம் தகுதிகளும் உண்டென்பதைஉங்களுக்கு புரியாவிட்டாலும் மக்களுக்கு நன்றாக புரியும்.
காமராஜரை புகழ பாஜகவிற்கு என்ன உரிமை எனக் கேட்கும் உங்களுக்கு காமராஜர்காலத்திலேயே காமராஜரை கைவிட்டுவிட்டு இந்திரா காங்கிரஸ்க்கு ஓடிப்போனகோஷ்டியிலிருந்து வந்ததே தகுதி என தலைவரான உங்களுக்கு காமராஜரை பற்றி பேச தகுதி இருக்கிறது என நீங்கள் நினைக்கும் போது தேசிய குடும்பத்தில் பிறந்து, தேசிய கட்சியில் பணியாற்றும் எனக்கு எல்லா தகுதி உள்ளது.
கார்த்திக் சிதம்பரம் காமராஜர் பெயரை சொல்லி எத்தனை நாளுக்கு அரசியல் செய்யபோகிறீர்கள் என சத்யமூர்த்தி பவனில் பேசியபோது உங்களுக்கு வராத கோபம் நாங்கள்காமராஜர் புகழ்பாடும் போது வருவது ஏன்?
பெயில் குடும்ப வாரிசுகளின் ஆசிபெற்றவர் என்ற தகுதியில் தலைவரான நீங்கள் என்தலைமைத் தகுதியை விமர்சிக்கிறீர்கள். இந்திரா கொண்டு வந்த அவசரகாலபிரகடனமே காமராஜரின் ஆயுளுக்கு எமன் ஆனது என்பது வரலாறு.
இந்திரா காந்தி அம்மையாரை மதுரையில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதோடுஅவர் சிந்திய ரத்தத்தை பெண்மையின் மாண்பை ஆபாசமாக விவரித்த தி.மு.க. உடன்கூட்டு வைக்கும் நீங்கள் அதே தி.மு.க தான் காமராஜர் அவர்கள் தேர்தலில் போட்டயிடும் போது அவருக்கு எதிராக ஒருமாணவனை நிறுத்தி சிறுமைப்படுத்தியது.
அதே தி.மு.கவுடன் கூட்டணி வைக்கும் நீங்கள் காமராஜரை பற்றி பேசலாமா?
மரியாதைக்குரிய பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் பண மதிப்பிழப்புநடவடிக்கை மேற்கொள்ளும் போது மரியாதைக்குரிய காமராஜர் அவர்கள் என்னுடைய இந்த செயலை மிகவும் பாராட்டியிருப்பார் என்று கூறினார்கள்.
நீங்கள் கூறும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட காங்கிரஸ் கலைக்கப்பட்டு விட்டது. இப்போதுள்ள காங்கிரஸ் ஊழல் நிறைந்த காங்கிரஸ்.
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.