கவுதம் கம்பீர், மீனாட்சி லெகி போட்டி

பாஜகவில் சமீபத்தில் இணைந்த இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்வீரர் கவுதம் கம்பீர், கிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

ரஃபேல் வழக்கு தீர்ப்பை திரித்துப்பேசியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீது உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பாஜக.,வின் புதுடெல்லி தொகுதி எம்.பி. மீனாட்சி லெகிக்கு கட்சியின் தலைமை மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது.

டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளையும் கடந்தமுறை பாஜக கைப்பற்றியது. நடந்துவரும் மக்களவைத் தேர்தலில் 6-வது கட்டமாக மே 12-ம்தேதி டெல்லியில் வாக்குப்பதிவு நடக்கிறது.

இந்தமுறை டெல்லியில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில், காங்கிரஸ் கட்சியுடன், ஆம் ஆத்மி கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. ஆனால், இருகட்சிகளும் பேச்சுவார்த்தையில் இறங்கிய நிலையில் காங்கிரஸ் கட்சிக்குள் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையிலான ஒருபிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் கூட்டணிப்பேச்சில் இழுபறி ஏற்பட்டது. கடைசி வரை இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறினார்களே தவிர பாஜகவை வீழ்த்தும் நோக்கில் ஒன்று சேரவில்லை. காங்கிரஸ் கட்சி கூட்டணிப் பேச்சுக்கு மறுக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. காங்கிரஸ் கட்சியோ, ஹரியாணாவிலும் கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி பங்குகேட்கிறது என்று விமர்சனம் செய்தது. இதனால், கடைசிவரை இருகட்சிகளாலும் கூட்டணி அமைக்க முடியாத சூழல் உருவானது.

இதனால் ஆம் ஆத்மி கட்சி 7 தொகுதிகளுக்கும் தனியாக வேட்பாளர்களை அறிவித்து, காங்கிரஸ்கட்சியும் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நேற்று அறிவித்தது. இதில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மீண்டும் போட்டியிடுகிறார்.

இந்தசூழலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் 6 பேரை மட்டும் அறித்துள்ளது. இதில் டெல்லி கிழக்கு தொகுதியில் பாஜகவில் சமீபத்தில்சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்.

கிழக்கு டெல்லியில் கம்பீரை எதிர்த்து காங்கிரஸ்கட்சி சார்பில் அர்விந்த் சிங் லவ்லியும், ஆம் ஆத்மி சார்பில் அடிஷியும் போட்டியிடுகின்றனர்.

புதுடெல்லி தொகுதியில் தற்போது எம்.பி.யாக இருந்துவரும் மீனாட்சி லெகிக்கு இந்த முறையும் பாஜக வாய்ப்புவழங்கியுள்ளது. மீனாட்சி லெகியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மாநிலகாங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மகான், ஆம் ஆத்மி  சார்பில் பிரஜேஷ் கோயல் போட்டியிடுகின்றனர்.

ஆனால், வடமேற்கு டெல்லிதொகுதிக்கு மட்டும் இன்னும் பாஜக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வில்லை.

இது தவிர தற்போது எம்.பி.க்களாக இருக்கும் டெல்லி சாந்தினி சவுக் எம்.பி. ஹர்ஸ் வர்தன், வட கிழக்கு டெல்லி தொகுதி மனோஜ் திவாரி, மேற்கு டெல்லி பிரவேஷ் வர்மா, தெற்கு டெல்லி ரமேஷ் பிதுரி ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...