தங்களிடம் போது மான உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததால், மஹாராஷ்டிரா முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக பட்னவிஸ் ராஜினாமாசெய்வதாக அறிவித்தார்.
மஹாராஷ்டிராவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. திடீர்திருப்பமாக, தேசியவாத காங்., கட்சியை சேர்ந்த அஜித் பவார் ஆதரவுடன், 23ல், பா.ஜ., ஆட்சி அமைத்தது. முதல்வராக, பா.ஜ., வின் தேவேந்திர பட்னவிசும், துணைமுதல்வராக அஜித் பவாரும் பதவியேற்றனர். இதை எதிர்த்து, சிவசேனா, காங்., தேசியவாத காங்., ஆகிய கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இதனைவிசாரித்த நீதிமன்றம், நாளை (நவ.,27) சட்டசபையை கூட்டவும், மாலைக்குள் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தவும் உத்தரவிட்டது.
இந்நிலையில் நிருபர்களை சந்தித்த முதல்வர் பட்னவிஸ் கூறியதாவது: பாஜ-சிவசேனா கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளித்தனர். 105 எம்எல்ஏக்கள் பா.ஜ.,வுக்கு கிடைத்தனர். தனிபெரும் கட்சியான பா.ஜ.,வுக்கு ஆட்சிஅமைக்கும் உரிமை உள்ளது. சிவசேனாவைவிட பா.ஜ., கூடுதல் தொகுதிகளைபெற்றது. முதல்வர் பதவி வழங்குவோம் என சிவசேனாவுக்கு எப்போதும் வாக்கு அளிக்க வில்லை. ஆனால், சிவசேனா பேரம்பேசும் வியூகத்தை கையாண்டது. முதல்வர் பதவி கேட்டு சிவசேனா மிரட்டல் விடுத்தது.
தேர்தல் முடிவு வெளியாகி, பா.ஜ.,வுக்கு சீட்கள் குறைந்த உடனே சிவ சேனா மற்ற கட்சிகளுடன் பேச ஆரம்பித்துவிட்டது. பொய்சொல்லி, பா.ஜ.,வை காத்திருக்க வைத்தது. ஆதரவுகேட்டு மற்ற கட்சிகளிடம் கெஞ்சதுவங்கியது. பால் தாக்கரே குடும்பத்தினர் மற்றகட்சிகளிடம் கெஞ்சினர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபைகுழு தலைவர் அஜித்பவார் ஆதரவு அளித்த காரணத்தினால்தான் பதவி ஏற்றோம். எங்களிடம் போதுமான உறுப்பினர்கள் ஆதரவு இல்லை. ஆதரவை தொடர முடியாது என அஜித் பவார் கூறிவிட்டதால்,பதவி விலகுகிறேன்.ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு அளிக்க உள்ளேன்.
சட்டசபையில் பா.ஜ., எதிர்க் கட்சியாக செயல்படும் கடந்த 5 ஆண்டுகள் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடு பட்டோம். அடுத்து அமையும் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் ஆட்சி நிலையான ஆட்சி அமையாக இருக்காது.புது அரசு, நெருக்கடியின் கீழ்தான் செயல்படும். அதிகாரத்திற்காக அலையும் சிவசேனா, காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பின்னர் கவர்னரை சந்தித்து, ராஜினாமா கடிதத்தை பட்னவிஸ் கொடுத்தார். இவ்வாறு அவர் கூறினார்.
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |